இந்தியத் திருநாட்டை இழிவுபடுத்திய ராகுல்காந்தியின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும் குஜராத்தின் மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தி சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள ராகுல் காந்தி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியை இழிவு படுத்துவதாக குறை சொல்வதாக நினைத்து பேசினாரா அல்லது இத்தாலி ,தாய்லாந்து மற்றும் மேற்குலக நாட்டின் மீது உள்ள பாசத்தால் இந்திய திருநாட்டை இழிவுபடுத்தி பேசினாரா என்று தெரியவில்லை.
நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் உதவியற்று சிரமப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். ஷாபானு வழக்கில் ராகுல் காந்தியின் தந்தை இஸ்லாமிய பெண்களுக்கு இழைத்த அநீதி பற்றி ராகுல் காந்திக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் ராகுல் காந்தி இன்னமும் சிறுகுழந்தை போல் செயல்படுகிறார்.
மேலும் முஸ்லிம்கள் சீக்கியர்கள் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதாக கூறியுள்ள ராகுல் காந்தி அவர்களே டெல்லியில் சீக்கிய இனமே இருக்க கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சீக்கிய மக்களை கொடூரமாக காங்கிரஸ் கட்சி கொலை செய்தது உலகத்திற்கே தெரியும்.
மேலும் 1980ல் இந்தியாவில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ இன்று முஸ்லிம்களுக்கு நடக்கிறது என்று ஒரு கொடூர மனநிலையோடு இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்திய மக்கள் ஒவ்வொரும் செயல்படுவது போல் பேசியுள்ளது வன்மத்திலும் வன்மம். மேலும் 1980 இல் காங்கிரஸ் கட்சி அதுவும் தங்களுடைய பாட்டி இந்திராகாந்தி தான் ஆட்சியில் இருந்தார் என்பதை வசதியாக மறந்து விட்டார்.
ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் தாய் நாட்டையும் தாய் மொழியையும் இழிவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் கூட இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி நமது இந்திய திருநாட்டை பற்றி இழிவு படுத்தி பேசினார். இதே நிலை தொடர்ந்தால் 2024 தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவர். மேலும் ராகுல்காந்தி தொடர்ந்து இந்திய திருநாட்டை இழிவுபடுத்தி பேசி வருவதால் நீதிமன்றம் ஆனது தாமாக முன்வந்து ராகுல் காந்தி அவர்கள் அவதூறு வழக்கில் பெற்றுள்ள ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.