கடன் பிரச்னையில் கணவனைத் தாக்கிய மனைவி; இன்னும் குற்றச் செய்திகள் சில..!

Published:

crime scene - 2026

திருநகரில் கடன் பிரச்சனையில் கணவர் மீது தாக்குதல் : மனைவி உள்பட 3 பேர் கைது

திருநகரில் கடன் பிரச்சனையில் கணவர் மீது தாக்குதல் நடத்திய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளாச்சேரி ஈஸ்வரன் நகர் ஆதீஸ்வரன் மகன் வேல்முருகன் 28. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஆனந்த் 38. ஆனந்தின் மனைவியும் வேல்முருகனும் ஒரே நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர். இந்த கடன் சம்பந்தமாக அவர்கள் அடிக்கடி போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆனந்த் அதே மகுதியைச் சேர்ந்த ஆணையன் மகன் செல்வராஜ் 25 வேல்முருகனின் மனைவி அபிநயா25 ஆகிய மூவரும் ஆபாசமாக பேசி வேல்முருகனை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து, வேல்முருகன் திருநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு ப்
பதிவு செய்து ,கணவர் வேல்முருகனை தாக்கிய மனைவி அபிநயா மற்றும் ஆனந்த் செல்வராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

கடன் வசூலுக்கு வர மறுப்பு சுய உதவி குழு ஊழியர் மீது தாக்குதல் மற்றொருவர் கைது

மதுரை , கோச்சடை கலைஅம்பலம் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஜெயபிரபா23. திருப்புவனம் கீழராங்கியம் ஒத்த வீடுவை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் தந்தீஸ் பிரபு 23 .இவர்கள் இருவரும் மகளிர் சுய உதவி குழு கடன்வசூல் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.சம்பவத்தன்று வசந்தநிரில் வசூலுக்கு வரும்படி தந்தீஸ்பிரபு அழைத்துள்ளார். இதற்கு ஜெயபிரபா மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த தந்தீஸ் பிரபு ,ஜெயா பிரபாவை ஆபாசமாக பேசி தாக்கினார் .இந்த சம்பவம் குறித்து ஜெயபிரபா சுப்ரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய வாலிபர் தந்தீஸ்பிரபுவை கைது செய்தனர்.

இளம் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கடத்திச் சென்று பணம் பறிப்பு: 7 பேர் கைது

இளம் பெண்ணுக்கு செக்ஸ்டார்ச்சர் கொடுத்து கடத்திச் சென்று பணம் பறித்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரிமேடு மோதிலால் மெயின் ரோடு தெற்கு மடத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற மண்ணெண்ணை கண்ணன் 44. இவர் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார் .தொடர்ந்து இவ்வாறு செய்து அவரிடம் பணம்கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கண்ணன் என்ற மன்னனை கண்ணன் அவருடைய மனைவி பிரேமா உறவினர்கள் செல்வி, பாலா, காதர் ,அருள்,மணி சங்கையாகிய ஏழு பேரும் அந்த பெண்ணை கடத்திச் சென்று அவரிடம் இருந்து ரூபாய் ஆறாயிரத்து ஐநூறை பறித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கடத்தி பணம் பறித்த ஏழு பேரையும் கைது செய்தனர்.

வேலையில்லாத விரக்தி; இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை, விராட்டிபத்து கிருதுமால் நகர்சுப்ரமணியன் மகன் ராஜா 21. இவருக்கு நிரந்தர வேலை இல்லை. அவரை வேலைக்கு செல்லும்படி அவருடைய தந்தை கண்டித்துள்ளார். இதனால் மணமடைந்த ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை மலனின்றி வாலிபர் ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தந்தை சுப்பிரமணியன் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து சாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

தெற்கு வாசலில் பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது!

தெற்கு வாசல் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்.இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.அவர் தெற்குவாசல் என்.எம்.ஆர் பாலம் கீழ்பகுதியில் சென்று கொண்டிருந்தார் .அப்போது போலீசை கண்டதும் இரண்டு வாலிபர்கள் ஓடிச் சென்று பதுங்கினர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார் .அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் வாள் ஒன்றும் அரிவாள் ஒன்றையும் வைத்திருந்தனர். அவற்றை பரிமுதல் செய்தார் .பின்னர் பிடிபட்ட வாலிபர்களிடம் விசாரித்த போது அவனியாபுரம் திருப்பதி நகர் எட்டாவது தெரு கணேசன் மகன் ரூபன் 24, அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் இருளப்பன் மகன் தமிழ் இனியன் 19 என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து எதற்காக என்ன திட்டத்தில் அவர்கள் பதுங்கி இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்த கைதி தப்பி ஓட்டம்!

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்ட நீதிமன்றம் இரண்டாவது அடிஷனல் என் டி பி எஸ் நீதிமன்றத்தில் மணி மகன் சரவணகுமார் என்ற வாழைப்பழ சரவணன் என்பவர் ஆஜரானார். அவர் மீதுள்ள முந்தைய வழக்கிற்காக ஆஜரானார்.பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் .இந்த நிலையில் திடீரென்று அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியர் அமராவதி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி கைதி சரவண குமாரை தேடி வருகின்றனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img