
தமிழக அரசு பேருந்தின் வண்ணம் இப்போது கருணாநிதிக்கு ராசியான மஞ்சள் கலருக்கு மாறுகிறதாம். இது குறித்து விட்ட பதிவில் வெளியான புகைப்படம் பேசுபொருள் ஆகிவிட்டது.
புதிய தொழில்நுட்பத்தில் புனரமைக்கப்பட்ட அரசுப்பேருந்தின் வெளித்தோற்றம். அனைத்து புனரமைக்கப்பட்ட பேருந்துகளுக்கும் இந்த வண்ண அமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது… என்று இதில் குறிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு பேருந்துகள் இரு வேறு வண்ணங்களில் உலா வருகின்றன. நீலம் மற்றும் பச்சை வண்ணங்களின் வடிவங்களில் உள்ள பேருந்துகள் வெளியூர்களுக்கும் நகரப் பேருந்துகள் டவுன் பஸ் களுக்கு ஒரு வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளன இது தவிர ரெட்பஸ் என்ற வகையில் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றுடன் இப்போது மஞ்சள் வண்ணத்தில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
எனினும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் தனித்து தெரிய மஞ்சள் வண்ணம் ஏற்கெனவே பூசப்பட்டது. இப்போ, அரசுப் பேருந்துக்கும் அதே வண்ணம் பூசினால், மாணவர்களுக்கு மீண்டும் குழப்பம் தான் மிஞ்சும்…. என்று சிலர் கருத்திட்டுள்ளனர். மஞ்சள் வண்ணம் பள்ளி கல்லூரி வாகனங்களுக்கு தனித்து தெரிவதற்காக பயன்படுத்தப்படும் சூழ்நிலையில் அரசு பேருந்துகளுக்கும் மஞ்சள் வண்ணம் என்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது உண்மைதான்.
பேருந்துகளுக்கு வண்ணம் பூசி பயன் இல்லை, தரம் என்பது உள்ளே உள்ள பொருட்களின் செயல்பாட்டைப் பொறுத்து உள்ளது. முதலில் மழையில் ஒழுகாத, உடைந்து தொங்கும் படிகள், கிழிந்து தொங்கும் இருக்கைகள் இல்லாமல் பஸ்களை ஓட்ட செயல்படுத்துங்கள்…. என்ற காட்டமான விமர்சனங்களும் இதற்கு எழுந்துள்ளன.