
இன்று ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரம். காட்டுமன்னார்கோவிலில் சுவாமி நாதமுனிகள் அவதரித்த நாள் இன்று .
நடப்பாண்டு சுவாமியின் 1,200-வது அவதார உற்சவத்தைக் பக்தர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சுவாமி நம்மாழ்வாரிடம் இருந்து பெற்ற நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்து, இசையமைத்து அதனை நாடு முழுக்க பரப்பியவர் சுவாமி நாதமுனிகள். அதனைத்தான் இப்போது நாம் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.
காட்டுமன்னார்கோவிலில் சதுர்வேதி மங்கலம் எனப்படும் குப்பங்குழியில், சுவாமி நாதமுனிகள் திருமாளிகையில் கடந்த 10 நாட்களாக சுவாமியின் அவதார உற்சவம் நடைபெற்று வருகிறது.
திருப்பல்லாண்டு தொடக்கமாக பிரபந்த சேவாகாலம், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, சம்பிரதாய காலட்சேபங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு நடைபெற்று வருகின்றன.