செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.40லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிட பணியை எம்எல்ஏ கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா துவக்கி வைத்தார்.

செங்கோட்டை, ஜூலை, 26: செங்கோடடை எஸ்எம்எஸ்எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் சுமார் ரூபாய் 40லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமைஆசிரியா் சுந்தரக்குமார் தலைமைதாங்கினார். உதவி தலைமைஆசிரியா் ஜோதிலெட்சுமி, தேசிய மாணவர் படை அலுவலா் அருள்தாஸ், நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் முருகன் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் செல்வி ஆகியோர் முன்னிலைவகித்தனா்.
தமிழாசிரியா் சிவசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடர்ந்து கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா கூடுதல் புதிய வகுப்பறை கட்டிட பணிகளை துவக்கி வைத்து கல்வி அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். பின்னா் பள்ளி மாணவர்களை கொண்டே புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான செங்கல்களை எடுத்து வைக்கும்படி கூறினார்.
இதனை எதிர்பார்க்காத மாணவர்கள் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பாவுக்கு நன்றி தெரிவித்து அவருடன் செல்பி எடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் முத்துக்குமார், குமார், மாவட்டத்துணைச்செயலாளா் பொய்கை சோ.மாரியப்பன், நகரச்செயலாளா் கணேசன் முன்னாள், இன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள், வார்டு கழக பிரதிநிதிகள், உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.