கல்வித் துறையில் நாத்திக வாதம்; நக்சல் பிரிவினைவாதம்: இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2026

தமிழ்நாடு கல்வித் துறையில் திக நாத்திகவாதம், நக்சல் பிரிவினைவாதம் திட்டமிட்டு ஆட்சி செலுத்துவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

சமீபத்தில் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் கல்லூரிகளில், பள்ளிகளில் நடத்த ஒரு சுற்றறிக்கை உயர் கல்வித் துறை மற்றும் பள்ளி கல்வித் துறையால் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் யார் யாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்ற தனியான குறிப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது ‌.

மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நிகழ்ச்சி நடத்தகோரி ஒரு சுற்றறிக்கை அனுப்பபடுகிறது.. பள்ளிகளுக்கு வந்த பட்டியலின் படி அல்லது உயர்கல்வித்துறை அல்லது பள்ளி கல்வி துறை எந்தந்த மாவட்டங்களுக்கு யார் போய் பேசுவது என தீர்மானித்துள்ளது போல பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் திராவிட கழக ஓவியா உட்பட நக்சல், பிரிவினைவாதிகள், நாத்திகவாதிகள் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

பண்பாட்டு நிகழ்ச்சி என்ற பெயரில் நாத்திகம், சாதிய பாகுபாடு, பிரிவினைவாதம், தேச விரோத கருத்துக்கள் மாணவர்கள் மனதில் திணிக்க திமுக அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அச்சப்படுகிறோம். கடந்த காலங்களில் மாணவர்கள் மனதில் தேசவிரோத கருத்துக்கள் திணித்து அவநம்பிக்கை ஏற்படுத்தி தவறான பாதையில் மாணவர்கள் செல்வதற்கு காரணமாக இருந்தது திமுக என்பது வரலாறு.

மொழி, இனம், சாதி உணர்வுகளை தூண்டிவிடுவது அபாயமானது. கடந்த சில மாதங்களாக சாதிய சச்சரவுகள் அதனால் வன்முறைகள் தமிழகத்தில் பெருகி உள்ளன என்பதை சுட்டிக் காட்டுகிறோம். ஓட்டு வங்கி அரசியலுக்காக மாணவர்கள் மனதில் தீய சிந்தனையை விதைப்பது அதிகார துஷ்பிரயோகம்.

எனவே தமிழக மக்களும், பெற்றோர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கு பேசப்படும் கருத்துக்கள் பேச வருபவர்கள் குறித்து கண்காணிக்க வேண்டும். பிரிவினை, சாதி உணர்வை தூண்டும் கருத்துக்கள் பேசுவதாக தெரிந்தால் உடனே தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது.

பள்ளி கல்வி துறை இத்தகைய போக்கை கைவிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். பிரிவினவாத நக்சல் பிரச்சாரங்கள் நடந்தால் இந்து முன்னணியின் இந்து இளைஞர் முன்னணி களத்தில் இறங்கி போராடி தடுத்து நிறுத்தும் என தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories