
செங்கோட்டையில் 77வது சுதந்திர தின விழாவில் நீதிபதி சுனில்ராஜா தேசியக்கொடி ஏற்றினார்.
செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நீதிபதி எம்.சுனில்ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியா்கள், வழக்கறிஞா்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின உரையாற்றினார்.
விழாவில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் கார்த்திகைராஜன், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.இராமலிங்கம், வீரபாண்டியன், வழக்கறிஞர் ஆ.சிவசுந்தரவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் மூத்த வழக்கறிஞர்கள் பழனிக்குமார், நல்லையா, இசக்கி இந்திரா, பால்ராஜ், நித்யானந்தம், கலிலா, அபுஅன்னாவி, நீதிமன்ற பணியாளர்கள், அரசு நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக பணியாளர் ஜெயராமசுப்பிரமணியன் நன்றி கூறினர்.
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நடந்த சுதந்திர தினவிழாவிற்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமைதாங்கினார். பொறியாளா் முகைதீன்அபுபக்கர், மேலாளா் ரத்தினம், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலைவகித்தனா். கணக்கர் கண்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னார் நகர்மன்ற தலைவா் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள் பேபி ரெசவு பாத்திமா, முருகையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினா்கள் ஞானராஜ், செந்தில்ஆறுமுகம் குத்தாலிங்கம் சுகாதார மேற்பார்வையாளா்கள், நகராட்சி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செங்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜேஷ்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றினார். வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மண்டல துணை தாசில்தார் குமார் தேசியக்கொடியை ஏற்றினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அலுவலக வளாகத்தில் சிறப்பு நிலைய அலுவலர்கள் செல்வம், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் மீட்பு பணி வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றினா்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலைமைஆசிரியா் சுந்திரக்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமைஆசிரியா் தமிழ்வாணி தேசியக்கொடியை ஏற்றினார்.
செங்கோட்டை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் நகர்மன்ற உறுப்பினா் சுடர்ஒளிராமதாஸ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியா்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் அன்னை தெரசா மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தலைமைதாங்கினார். செயலாளா் சீதாராமன் உறுப்பினா் தேன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தாளாளா் விசுவாச ஆரோக்கியராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடா்ந்து ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மாணவ, மாணவியா்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னா் மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
செங்கோட்டை ரோட்டரி கிளப் கேலக்ஸி மற்றும் செங்கோட்டை ஆவாரம்பாளையம் சர்வோதய சங்க காதிபவன் சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி தலைவா் சுந்தர் தலைமை தாங்கினார். ஜனநாயக மக்கள் உரிமை கழக மண்டலச்செயலாளா் முருகையா புருஷோத்தம ராஜா, ரோட்டரி கிளப் ஆப் கேலக்ஸி செயலாளா் வழக்கறிஞா் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
சர்வோதய சங்க கிளை மேலாளா் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் கேப்டன் முத்துக்கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடி வணக்கம் செய்தார். சமூக ஆர்வலா்கள் சக்திவேல், குற்றாலிங்கம், பொன்னுத்துரை, இசக்கிமுத்து, ஆகியோர் சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில் அருணாசலம், வேல்ச்சாமி, இசக்கிபாண்டியன், சண்முகநாதன், மாரியப்பன், வெங்கடாசலமூர்த்தி, செந்தில்குமார், ராமசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் செங்கோட்டை மேலபஜார் வாகைமரத்திடலில் அமைந்துள்ள மகாத்மா காந்தி முழுஉருவ சிலை, பேரூந்துநிலையம் அருகில் உள்ள வீரவாஞ்நாதன் முழுஉருவ சிலை, நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மாகாந்தி திருவுருவ சிலை, முத்துசாமி பூங்காவில் உள்ள மகாத்மாகாந்தி திருவுரு சிலை, வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
செங்கோட்டை நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேலபஜார் வாகைமரத்திடலில் உள்ள மகாத்மா காந்தி சிலைமுன்பு வைத்து சுதந்திர தினவிழா மற்று கட்சி கொடியேற்றும் விழா நடந்தது. விழாவிற்கு நகர காங்கிரஸ் கட்சி தலைவா் ராமர் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்எஸ்.முத்துசாமி, முன்னிலைவகித்தார் நகர இலக்கிய அணி தலைவா் ராஜீவ்காந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நிகழச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பழனிநாடார் கலந்து கொண்டு மகாத்மாகாந்தியின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் கட்சி கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு செயலாளா் ஜோதிலிங்கம்.மாவட்ட செயற்குழு உறுப்பினா் செண்பகம் நகரத்துணைத்தலைவா் முருகையா, நகர ஐஎன்டியுசி தலைவா் செல்வகணபதி, நகர பொதுச்செயலாளா்கள் சுடலைமுத்து, இசக்கியப்பன், நகர பொருளாளா் சங்கரலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த இராணுவ வீரர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியின் போது தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் சந்திரசேகர் உடல் அரசு மரியாதை செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்து கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி நல்லாசிரியர் முனைவர். சுடலை, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ஆதிமூலம், முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜவஹர்லால் நேரு, நன்நூலகர் ராமசாமி, ஆசிரியர் சுதாகர், அரசமரம் மன்சூர், பழனிச்சாமி, வழக்கறிஞர் அபுஅண்ணாவி, காதர் மைதீன், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக மூத்த தொழில்நுட்ப பணியாளர் முத்தரசு, சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மெளன அஞ்சலி செலுத்தினர்.