
உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் ஆவணி மாதம் மலையாள புத்தாண்டு பூஜை வழிபாட்டிற்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டு இன்று முதல் பூஜை வழிபாடுகள் சபரிமலை ஐயப்பனுக்கு துவங்கியது புதிதாக பொறுப்பேற்ற தாந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு சபரிமலை ஐயப்பனுக்கு பூஜை வழிபாடுகளை துவக்கி வைத்தார்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று ஆக 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு பதவிக்காலம் முடிந்ததால் புதிய தந்தரியாக கண்டரரு மகேஷ் மோகனரு நேற்று சபரிமலைக்கு வருகை தந்து ஐயப்பன் சன்னிதானம் முன்பு தந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் சபரிமலை பூசாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை தந்துரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்தார்.
இன்று முதல் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் கணபதி ஜோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
மேலும் இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன.
இன்று ஆவணி மாதம் முதல் நாள் மலையாள வருடத்தின் சிம்மம் முதல் நாளாகும். இதனால் இன்றைய தினம் சபரிமலையில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது . மலையாள புத்தாண்டில் ஐயனை தரிசிக்க சபரிமலையில் மலையாளிகள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது அதிகாலை கோவில் நடை திறந்ததும் இவர்கள் 18 படி ஏறி பகவானுக்கு இருமுடி செலுத்தி மைய அபிஷேகம் செய்தனர் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை குறைந்து விட்டதால் பம்பை நதியில் மிகக் குறைவான அளவில் தண்ணீர் வந்தது.
ஆவணி மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21-ந்தேி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் திறக்கப்படுகிறது