spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்தென்காசியில்... திக்குமுக்காடிய அண்ணாமலை!

தென்காசியில்… திக்குமுக்காடிய அண்ணாமலை!

- Advertisement -
annamalai in tenkasi

தென்காசியில் பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டார். செப்.04 திங்கள் கிழமை தொடங்கி, இருநாட்கள் அவரது பாத யாத்திரை தென்காசி மாவட்டத்தில் இருந்தது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி கீழப்புலியூர் வழியாக தென்காசியில் திங்கள் இரவு பயணம் மேற்கொண்டார்.

தொடர்ந்து மறுநாள் கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர் வழியாக புதன்கிழமை ராஜபாளையம் தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். தென்காசி எல்லையில் அவருக்கு வரவேற்பு பலமாக இருந்தது. தென்காசிக்கு இரவு வந்து சேர்ந்த போது வெகுநேரமானதால், தனியாக ஒரு நாள் தனது பயணத்தினிடையே இந்த மாதம் வந்து பொதுக்கூட்டத்தில் பேசுவதாகக் கூறினார் கே.அண்ணாமலை.

தான் தென்காசியில் திரண்ட மக்கள் கூட்டத்தில் திக்குமுக்காடிப் போனதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது….


தமிழ் மொழியும் நம் தர்மமும் செழித்து வளர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியில், #EnMannEnMakkal பயணம் பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. நமது புனித பூமியான காசி, முகலாயர் படையெடுப்புக்கு ஆளான போது, பாண்டிய மன்னர் கனவில் சிவபெருமானே தோன்றி, தக்ஷிண காசி திருக்கோவிலை நிர்மாணிக்கச் சொன்னதாக, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டிய மன்னர் கல்வெட்டே எழுதி வைத்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, சேர நாட்டுடன் நம்மை இணைக்கும் பகுதியாக தென்காசி விளங்குகிறது. திருக்குற்றாலத்துக்கு நுழைவாயிலாக இருக்கும் இம்மண், உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிற ஊர் ஆகும். தொழில் செய்யும் சமூகங்கள் நிறைந்து வாழும் இப்பகுதியில், பணப்பயிர் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், தொழில் வளத்தை பெருக்கும் வேலை வாய்ப்பையோ, வேளாண் வணிக உலகளாவிய சந்தைகளை உருவாக்கும் நோக்கமோ இந்த ஊழல் திமுக அரசிற்கு இல்லை.

தென்காசி ரயில் நிலையத்தின் தரத்தை உயர்த்திட அம்ரித் பாரத் ரயில் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு மட்டும் சுமார் 1650 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவிடுகிறது.

தென்காசி மாவட்டத்திற்கு திமுக கொடுத்த, ‘சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மை கல்லூரி, புளியங்குடியில் எலுமிச்சையை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கால்நடை மருத்துவமனை ‘ என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் ஊழல் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

தென்காசி திமுகவில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை. இதை மறைக்க திமுக எத்தனை வேஷம் போட்டாலும் இனிமேல் மக்கள் ஏமாற மாட்டார்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியான இந்தி கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து கருத்துக்கள் கூறிக் கொண்டு இருக்கிறார்.

அவரது தந்தையார் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்.

தன் தந்தை எழுதிய சுயசரிதையையே முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் படித்ததில்லை என்பது எத்தனை பரிதாபம்?


புரிதல், சிந்தனை இல்லாமல் பேசுவதே தி.மு.க.,வின் வழக்கம்

செந்தமிழ் மொழியும்; நம் சனாதன தர்மமும் செழித்து வளர்ந்த, இயற்கை எழில் கொஞ்சும் தென்காசியில், ‘என் மண் என் மக்கள்’ பயணம், பெரும் திரளெனக் கூடியிருந்த மக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. பா.ஜ., தடயமே தமிழகத்தில் இல்லை என்று சொன்னவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில், தென்காசி கடையத்தில் கடல் போல் திரண்டு இருந்த மக்கள் கூட்டத்தில், அன்பில் திக்கு முக்காடி போனேன்.

ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம் ஆவலுடன் முண்டி அடித்துக் கொண்டு அருகில் வர முயற்சிக்க, நடைபயணத்தை தொடர முடியவில்லை. மக்கள் வெள்ளத்தில் நீந்தி, மேடையிலே பேசுவதற்கு ஏறும்போது, எங்களுக்கு போலீஸ் வழங்கி இருந்த நேர அனுமதியை நெருங்கியிருந்தோம்.
ஆனாலும், மாலையில் இருந்து காத்திருந்த மக்கள் கூட்டம். அவர்களை ஏமாற்றவும் மனமில்லாமல், போலீஸ் அனுமதியையும் மீற மனமில்லாமல், உண்மையிலே தவித்துப் போனேன்

அங்கே கூடியிருந்த மக்களிடம், மன்னிப்பு கேட்டு, ‘இன்று நான் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். இன்னொரு நாள் உங்கள் ஊருக்கு வந்து, உங்கள் அனைவரையும் சந்தித்து பேசுவேன்’ என்று உறுதியளித்தேன். அப்போது தான், மனதுக்கு ஆறுதலாக இருந்தது. அதைப் புரிந்து, ஆதரவு நல்கிய தென்காசி மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • திருக்குற்றாலத்துக்கு நுழைவாயிலாக இருக்கும் இம்மண், உலகம் முழுதும் இருந்து சுற்றுலா பயணியர் வருகிற ஊர். தொழில் செய்யும் சமூகங்கள் நிறைந்து வாழும் இப்பகுதியில், பணப்பயிர் விவசாயம் சிறப்பாக நடக்கிறது. ஆனால், தொழில் வளத்தை பெருக்கும் வேலை வாய்ப்பையோ, வேளாண் வணிக உலகளாவிய சந்தைகளை உருவாக்கும் நோக்கமோ, ஊழல் தி.மு.க., அரசுக்கு இல்லை.
  • தென்காசி ரயில் நிலையத்தின் தரம் உயர்த்த, ‘அம்ரித் பாரத்’ ரயில் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தென்காசி மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு மட்டும், 1,650 கோடி ரூபாயை மத்திய அரசு செலவிடுகிறது
  • சங்கரன்கோவில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லுாரி, சட்டக் கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மை கல்லுாரி, புளியங்குடியில் எலுமிச்சை தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக், கால்நடை மருத்துவமனை என, தேர்தல் வாக்குறுதி அளித்த எதையுமே தி.மு.க., அரசு செய்யவில்லை.

தென்காசி தி.மு.க.,வில் பெண் நிர்வாகிகளுக்கே பாதுகாப்பில்லை. இதை மறைக்க, அக்கட்சி எத்தனை வேஷம் போட்டாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள். வரும் லோக்சபா தேர்தலில், சந்தர்ப்பவாத ஊழல் ‘இண்டியா’ கூட்டணியை, மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பிரதமர் மோடியின் நல்லாட்சியைத் தொடரச் செயவர் என்பதில் சந்தேகமில்லை.

  • சனாதன தர்மத்தை பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், அது குறித்த உண்மையை மற்றவர்களிடமிருந்தும் கேட்டும் அறியாமல், ‘கொசுவை, மலேரியாவை, டெங்குவை, கோவிட்டை ஓழிப்பதுபோல, சனாதன தர்மத்தை ஓழிப்பேன். இதற்காக எந்த கேஸ் போட்டாலும் பரவாயில்லை’ என்று பேசியிருக்கிறார், உதயநிதி.

கடந்த 5ம் தேதி வெளியான, ‘தினமலர்’ நாளிதழின், ‘சிந்தனைக்களம்’ பகுதியில், அதன் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் சனாதனம் பற்றிய கட்டுரையைப் படிக்க, அமைச்சர் உதயநிதி நேரம் ஒதுக்கலாம். அதே பக்கத்தில், சகோதரர் ரங்கராஜ் பாண்டே எழுதியுள்ள, ஒழிக்க முடியாத சனாதனத்தையும் ஊன்றிப் படிக்கலாம். ஒரு பொருளைப் பற்றிய புரிதலும், சிந்தனையும் இல்லாமல் பேசுவதை, தி.மு.க.,வினர் வழக்கமாக உள்ளது.

சிறுபான்மையினத்தவரின் ஓட்டு வங்கியை மனதில் வைத்து, தொடர்ந்து ஹிந்துக்களை அவமானப்படுத்தும் செயலை, தி.மு.க.,வினர் திட்டமிட்டு செய்து வருகின்றனர். சனாதன தர்மம் பேசும் ஹிந்து மதத்தை ஒழிப்போம் என்பதற்காக, கூட்டப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டதன் வாயிலாக, அங்கு பேசப்பட்ட கருத்துக்களை ஆதரிப்பதன் வாயிலாக, இனி ஹிந்து சமய அறநிலையத் துறையை நிர்வகிக்கும் சேகர்பாபு, அமைச்சர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். எனவே, வரும் செப., 10க்குள், அவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை எனில், தமிழகம் முழுதும் 11ம் தேதி முதல் போராட்டங்கள் நடத்தப்படும்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கையிலிருக்கும் கோவில்களை, நம்முடைய பாரம்பர்யங்களை, மரபுகளை மீட்டெடுக்க இப்போராட்டம் மிக அவசியமாகிறது. பாத யாத்திரைக்கு மக்கள் தரும் ஆதரவை, தமிழ் மக்களின் மானம் காக்கும் இப்போராட்டத்திற்கும் நல்க வேண்டும்.


இன்றைய #EnMannEnMakkal பயணம், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், இளைஞர்கள், சகோதரிகள் என பெரும் திரளெனக் கூடி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை, மூன்றாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுப்பதில், தமிழகமும் பெரும் பங்கு வகிக்கும் என்பதை உரக்கக் கூறியிருக்கிறார்கள்.

தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஊழல் கட்சிகளுக்கும், குடும்ப அரசியலுக்கும் இனி இங்கு இடம் இல்லை என்பதை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் உணர்த்துவார்கள். சரித்திரச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த பயணம் அதைத் தெளிவாக உணர்த்துகிறது.

கடையநல்லூர் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாத ஊழல் திமுக கூட்டணிக்கு, வரும் தேர்தல் ஒரு பாடமாக அமையும்.


கணவனும் மனைவியும் சரிசமம் என்பதை உலகுக்கு உணர்த்தும் அற்புதத் திருவடிவம் ஆசீர்வதிக்கும் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர், புளியங்குடியில், இன்றைய #EnMannEnMakkal பயணம் பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது. பொதிகையை ஆண்ட சேர மன்னன் ரவிவர்மன் மகனின் தீரா நோயைக் குணப்படுத்திய சக்தி வாய்ந்த கடவுள் அர்த்தநாரீஸ்வரர். பூலித்தேவர், ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி ஆகியவர்கள் வாழ்ந்த வீரம் செறிந்த மண் வாசுதேவநல்லூர். அவர்கள் வீரத்துக்கு நெற்கட்டும் செவல் நடுகல்லே சாட்சி.

ஒரு காலத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான பாசன நிலங்கள் இருந்த பகுதி, 2006 ஆம் ஆண்டு, கேரள அரசு இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்ததால், இன்று, பாசன நிலங்கள் குறைந்துவிட்டன. அன்று ஆட்சியில் இருந்த திமுக அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெத்தனமாக இருந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை என தமிழக விவசாயிகள் நலனை மொத்தமாக கேரள கம்யூனிஸ்ட்டுகளிடம் அடகு வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

தமிழகம் கடந்த 9 ஆண்டுகளில் செய்த வரிபங்களிப்பு 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழகத்திற்குக் கிடைத்தது 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி என்று பொய் பேசியுள்ளார் திரு முக ஸ்டாலின் அவர்கள்.

தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் கிடைத்தது 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகம் செய்த வரி பங்களிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் திருப்பி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.

#மோடியின்_முகவரி : வாசுதேவநல்லூர்

தமிழகத்திலுள்ள 4824 தென்னை வளர்ச்சி வாரியங்களில், மத்திய அரசின் நிதி பெற்று, தென்னை விவசாயம் செய்யும் திரு. கிருஷ்ணகுமார், முத்ரா திட்டம் மூலம் தொழில்முனைவோராகியிருக்கும் திரு கணேசன், கிஸான் கடனுதவி மூலம் பலனடைந்துள்ள திரு அழகப்பாண்டியன், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பலனடைந்த திருமதி. முத்துமாரி, உஜ்வாலா திட்டம் மூலம் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற திருமதி அழகுரத்னம். இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

ஒரே நாடு ஒரே தேர்தலைப் பற்றி தமிழக அரசியல் தலைவர் ஒருவர் எழுதியிருக்கிறார். “அடிக்கடி தேர்தலைச் சந்திக்கும் தொல்லையிலிருந்து மக்களைத் தவிர்ப்பதற்காகவும், நிர்வாகம் தடங்கலின்றி நடைபெற்று மக்களின் நன்மைகளில் நாட்டம் செலுத்தவும், பொதுப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காகவும், நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பஞ்சாயத்து ஆகியவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்தது என்று நான் கருதுகிறேன்.” ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும் பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன்” இதைச் சொன்னது கலைஞர் கருணாநிதி. நெஞ்சுக்கு நீதி – இரண்டாம் பாகம், பக்கம் 271,272,273ல் கலைஞர் கருணாநிதி தான் அன்று பத்திரிகையாளர்கள் மற்றும் திமுகவினரிடம் பேசியதை பற்றி எழுதியுள்ளார். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை, தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்த்து கருத்துக்கள் கூறிக் கொண்டு இருக்கிறார். தன் தந்தை எழுதிய சுயசரிதையையே முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் படித்ததில்லை என்பது எத்தனை பரிதாபம்?

தென்காசி மாவட்டத்திற்கு திமுக கொடுத்த, ‘சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மை கல்லூரி, புளியங்குடியில் எலுமிச்சையை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கால்நடை மருத்துவமனை ‘ என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் ஊழல் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. தென்காசி மாவட்டத்திற்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுகவின் பட்டத்து இளவரசர் தென்காசி வருகிறார். இப்படி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் வருகிறீர்களே என்று மக்கள் கேட்பார்கள் இல்லையா? அதனால் தான் சனாதன ஒழிப்பு என்று முட்டாள்தனமாக பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேசிய ஒருத்தர் சிவபெருமானுக்காக தென்காசியை உருவாக்கிய பராக்கிரம பாண்டியனின் மண்ணில் வருவது வெட்கக்கேடு. இன்று இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேசுவார். நாளை கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தை ஒழிப்போம் என்று பேசுவாரா?

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியான இந்தி கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe