கரூர்: பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் முற்றுகை!

karur sidhar group protest - 2026
#image_title

கரூரில் சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் சீடர்கள் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமம் குமார கவுண்டன்புதூர் என்ற இடத்தில் அமைந்துள்ள சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் ஜீவ சமாதியில் நித்திய பூஜைகள், சிறப்பு பூஜைகள், அன்னதானம் போன்றவை நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு சித்தர் பாலசுப்பிரமணியசாமி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜீவசமாதி அமைந்துள்ள 41 சென்ட் நிலமானது பல்வேறு நபர்களிடமிருந்து விற்று, வாங்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு நாராயணன் என்பவர் கந்தசாமி என்பவரிடம் அந்த இடத்தை விற்பனை செய்துள்ளார். இந்த நிலையில் நாராயணன் அறக்கட்டளை நிர்வாகிகளை அணுகி அந்த இடத்தை வாங்கிக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

அதனடிப்படையில் அறக்கட்டளை சார்பில் பத்தாயிரம் ரூபாய் முன் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சப்டிவிஷன் செய்து அறக்கட்டளையின் பெயரில் பதிவு செய்து கொள்வதாக கூறியுள்ளனர். மேலும், நவம்பர் 2022ல் அதற்கான விண்ணப்பத்தையும் அளித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது வரை தற்போது வரை அந்த இடமானது சப் டிவிஷன் செய்து தரப்படவில்லை.

இதற்கிடையில் நாராயணன் மானாமதுரையைச் சேர்ந்த மற்றொரு அறக்கட்டளைக்கு மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த இடத்தை கிரயம் செய்து கொடுப்பதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த வந்த பாலசுப்பிரமணியசுவாமி அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சீடர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட இடத்தை பதிவு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

அந்த இடத்தை நேரில் சென்று கள ஆய்வு செய்த பிறகு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories