
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
இரண்டாவது ஆட்டம்,
பாகிஸ்தான் vs நெதர்லாந்து
ஹைதராபாத் -06.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பாகிஸ்தான் அணி (49 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 286 ரன், ரிஸ்வான் 68, ஷகீல் 68, நவாஸ் 39, லீட் 62 ரன்னுக்கு 4 விக்கட்) நெதலாந்து அணியை (41 ஓவர்களில் 205 ரன், லீட் 62, விக்ரம்ஜித் சிங் 52, ரவுஃப் 3/43, ஹசன் அலி 2/33)
பூவா தலையா வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதல் பவர் ப்ளே (1 முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் 3 விக்கட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்தது. 38 ரன்னுக்கு 3 விக்கட்டுகள் இழந்த நிலையில் இருந்த பாகிஸ்தானின் ஆட்டத்தை ரிஸ்வானும் ஷகீலும் தூக்கி நிறுத்தி, 158 ரன்னுக்கு 4 விக்கட்டுகள் என்ற நிலைக்கு கொண்டு வந்தனர்.
அதிரடி ஆட்டக்காரர் பாபர் அசம் இன்று 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பல பாகிஸ்தான் வீரர்கள் சரியாக விளையாடாத போதும் அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 286 ரன் என்கிற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
மாக்ஸ் ஓ’டவுடின் விக்கட்டுக்குப் பின்னரும் நெதர்லாந்து பிரகாசமாக தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. விக்ரம்ஜித் சிங் தனது தாக்குதல் ஆட்டம் மூலம் பவர்பிளேயை அதிகம் பயன்படுத்தினார்.
மோசமான ஷாட் தேர்வு டச்சு இன்னிங்ஸில் இன்று நாம் கண்ட காட்சி. ஆனால் மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் பாகிஸ்தானுக்கு உண்மையான பயத்தை அளித்தது. பந்து வீச்சில் சிறப்பாக் செயல் பட்ட டி லீடே, சிங்கிடம் இருந்து ஆக்கிரமிப்பாளர்-பேட்டராகப் பொறுப்பேற்றார்.
கடைசி ஆட்டக்காரர்களில் வான் பீக் சற்று சிறப்பாக ஆடினார். மற்ற நெதர்லாந்து ஆட்டக்காரர்கள் சரியாக ஆடவில்லை; பெஉம்பாலானோர் ஒற்றை இலக்கைத் தாண்டவில்லை.
பாகிஸ்தான் அணியின் சுழப் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் 9 ஓவர் வீசி 43 ரன் கள் கொடுத்து 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். நெதர்லாந்து 41 ஓவர்களில் 205 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.