காவிரியில் கருணாநிதியின் துரோகங்களின் போது உடனிருந்த வைகோ., இப்போது வாய் திறப்பது மக்களை ஏமாற்றும் நாடகம் என்று கூறியுள்ளார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா.
அவர் இதுகுறித்து எழுதியுள்ள பதிவில், மைசூர் ஸ்டேட் மற்றும் சென்னை ராஜதானி இடையிலான 1924 ஒப்பந்தம் புதுப்பிக்காதது, உச்சநீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றது, கர்நாடகம் காவிரியில் கட்டிய அணைகளுக்கு சட்டசபையில் ஒப்புதல் தந்தது ஆகிய துரோகங்களை திமுக செய்தபோது கருணாநிதியுடன் இருந்த வைகோ இன்று நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹெச். ராஜா பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…
மைசூர் ஸ்டேட் மற்றும் சென்னை ராஜதானி இடையிலான 1924 ஒப்பந்தம் புதுப்பிக்காதது, உச்சநீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றது, கர்நாடகம் காவிரியில் கட்டிய அணைகளுக்கு சட்டசபையில் ஒப்புதல் தந்தது ஆகிய துரோகங்களை திமுக செய்தபோது கருணாநிதியுடன் இருந்த வைகோ இன்று நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறார்
— H Raja (@HRajaBJP) February 26, 2018



