
செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு இன்று அறிவித்தபடி ரயில் மின்சார லோகோவில் இயக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில் செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
அக்.18 புதன் இன்று காலை 06.45 க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட செங்கோட்டை – திருநெல்வேலி ரயில் முதன்முதலாக WAP7 மின்சார லோக்கோவால், மின்மயமாக்கப்பட்ட செங்கோட்டை – தென்காசி – பாவூர்சத்திரம் – அம்பாசமுத்திரம் – கல்லிடைக்குறிச்சி – சேர்மாதேவி – திருநெல்வேலி ரயில் பாதையில் இயக்கப்பட்டது.
லோக்கோ பைலட் சிவகுமார், உதவி லோக்கோ பைலட் விஷ்ணு B ராஜ் ஆகியோருக்கு வாழ்த்து சொல்லி, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் செயலர் கே.எச்.கிருஷ்ண, பி.ஆர்.ஓ., ராமன் ஆகியோர் கலந்து கொண்டு, சங்கத்தின் சார்பில் WAP 7 லோக்கோவுக்கு மலர் மாலைகளால் அலங்கரித்தனர்.
செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள், லோக்கோ பைலட்டுகள், பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்பு கேக் வழங்கப்பட்டது.
இந்த மின்சார ரயில் பாதை கனவை சாத்தியமாக்கிய, இந்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரிய தலைவர், தெற்கு ரயில்வே பொது மேலாளர், தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகள், மதுரை கோட்ட அதிகாரிகள், ரயில்வே தொழிற் சங்க தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
வீடியோ செய்தி: