
‘தமிழகத்தில் பாஜக., ஆட்சிக்கு வரும் அந்த நாளில், ஹிந்து சமய அறநிலையத் துறை என்ற அமைச்சகத்தின் கடைசி நாளாக இருக்கும்.” என்று தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் பேசினார்.
அண்ணாமலை மேற்கொண்டு வரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் நூறாவது தொகுதியாக நேற்று மாலை, திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் நான்கு கால் மண்டபம் பகுதியில் இருந்து, அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழக அரசியல்வாதிகள் சனாதன தர்மத்தை ஒழித்து விடுவோம் என்று பேசுகின்றனர். மொகலாய மன்னர்களால் ஒழித்துக் கட்ட முடியாத சனாதன தர்மத்தை, தி.மு.க., ஒழித்துக்கட்டி விடுமா? மொத்தம் 12 ஆயிரம் வைணவர்கள் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய சனாதன தர்மத்தை இன்று கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
மருது சகோதரர்கள், ஆங்கிலேயர்களை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முடிவு கட்டியவுடன், 1801 ஜூன் 16ம் தேதி, ஜம்பு தீவு பிரகடனத்தை, ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவரில் ஒட்டி, ஆங்கிலேயர்களுக்கு அறைகூவல் விடுத்தனர். வீரம் மிக்க மண்ணில் மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடனத்தில் கடைசி வரியில், ‘தொண்டு ஊழியம் செய்து, சுக வாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால், அவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். மீசை வைத்த அனைவருக்கும் வீரம் இருந்தால், இந்த ஈனர்களை அழித்து விட வேண்டும்.
ஈனர்களுக்கு தொண்டு ஊழியம் செய்பவர்களுக்கு மோட்சம் கிடையாது. அயோக்கிய ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தனர். அதே போல், தீய சக்தியான தி.மு.க.,வை எதிர்த்து நாம் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இந்த ஸ்ரீரங்கத்தில் இருந்து உறுதியெடுக்கிறேன்… தமிழகத்தில், பாஜக., ஆட்சிக்கு வரும் போது, ஸ்ரீரங்கம் உள்பட பல்வேறு கோவில்கள் முன், ‘கடவுள் இல்லை’ என்று எழுதி வைத்திருப்பது அப்புறப்படுத்தப்படும்.
பாஜக., ஆட்சிக்கு வந்ததும், ஹிந்து சமய அறநிலையத் துறை என்ற அமைச்சகமும் இருக்காது. இது, என் மண், என் மக்கள் நடைபயணத்தின் பிரகடனம். – இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு ஆத்திகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் பேச்சுக்கு ஆதரவாக பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் ஓர் இரண்டு இங்கே….
இதே ஸ்ரீரங்கத்தில் 1801ல் மருது பாண்டியர்கள் ஜம்புதீவு பிரகடனம் செய்தது போன்று இன்று 2023 நாம் சொல்கிறோம் அதே ஸ்ரீரங்கத்தில் இருந்து
1) பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முதல் நாள் ஹிந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படும்.
2) இந்து கோவில்களுக்கு முன்பாக இருக்கும் கடவுள் இல்லை என்கிற பலகை அனைத்தும் அகற்றப்படும்.
3) அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேகம் முன்னிட்டு ஜனவரி 22 இலிருந்து 60 நாட்கள் 60 ரயில்கள் இலவசமாக அயோத்திக்கு ஸ்ரீ ராமபிரானை தரிசிக்க ஏற்பாடு செய்து தரப்படும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக.
திரு.அண்ணாமலை அவர்கள் #EnMannEnMakkal
ஸ்ரீரங்கத்தில் அண்ணாமலையால் சனாதன எழுச்சி துவங்கியது! எம் பெருமானால் தொடக்கி வைக்கப்பட்டது
கிருஷ்ணன் அர்ஜுனனை இயக்கியது போல், எம்பெருமான் அண்ணாமலை அவர்களை இயக்க ஆரம்பித்து விட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது
ரெங்க நாதன் ஆசி வழங்க அண்ணாமலை அவர்கள் பொரிந்து தள்ளி விட்டார்
யாரும் சொல்லத்துணியாத வார்த்தை ஆனால் கண்டிப்பாக சொல்ல வேண்டிய வார்த்தை.
இன்று அண்ணாமலையின் பேச்சில் அனல் பறந்தது என்னவோ உண்மை. பெரியார் சிலையை அகற்றுவோம்னு சொன்ன முதல் ஆண்மகன்.. இப்படி ஒருவன் உதிப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை
பாஜக ஆட்சிக்கு வந்ததும் பெரியார் சிலை அகற்றுவதுடன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழ்புலவர்கள், வள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் என்று ஓங்கி ஒரு அடி அடித்து விடடார். யாரும் எதிர்பார்க்கவில்லை .
ஆன்மிகம் துளிர் விட ஆரம்பித்து விட்டது என்பது உண்மை.. ஆன்மிகவாதிகள் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள் என்பதும் உண்மை..
ஆனால் வலியால் துடிக்கின்றன கிழட்டு ஓநாய்கள்.. நாளையில் இருந்து பத்திரிகைகள் அலற ஆரம்பிக்கும்.. கிழட்டு தலைவர்கள் அங்கும் இங்கும் பாய்ந்து செல்வார்கள்.. ஒருவன் கோர்ட்க்கு ஓடுவான். ஒருவன் மைக்குக்கு ஓடுவான்
இருந்தாலும் தன ஆண்மை பலத்தை நிரூபிக்க, நாளை காலை தோழில் துண்டை போட்டு கொண்டு தெருவுக்கு வரும் இந்த கிழ சிங்கங்கள்
பொதுவாக இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் சொல்ல பயப்படும் வார்த்தை பெரியார்.. பெரியார் என்ற பெயருக்கு எந்த சக்தியும் கிடையாது என்பது பல பேருக்கு தான் தெரியும், சில பேருக்கு தெரியாது.. ஏன் முற்றும் தேர்ந்த அரசியாவதிகளுக்கே தெரியாது..
பெரியார் என்ற சொல்லை இன்று சிறுபான்மையினரை சந்தோஷப்படுத்தி ஒட்டு வாங்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர் இது மறுக்க முடியாத உண்மை
ஆனால் இன்று காலத்தின் சுழற்சி மாறி விட்டது.. அண்ணாமலை ஏறி அடிக்க ஆரம்பித்து விட்டார்..
சுமார் மூன்று ஆண்டுகள் முன்பு தமிழ்நாட்டில் யாரென்றே தெரியாத மனிதர்… இன்று போகும் இடமெல்லாம் கூட்டம் கூட்டமாக மக்கள் வெள்ளம்… ஏன்.
ஏன் என்றால் ஆன்மீக தாகம். ஆன்மிகத்தை சீரழிக்கும் திராவிடத்தின் மீது மக்கள் அவ்வளவு வெறுப்பில் உள்ளனர்.
அண்ணாமலை பக்கம் இளைஞர்கள் செல்வதற்கு காரணமே… அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, சமரசம் இல்லாத கொள்கைபிடிப்பு ஆகியவை தான்.
சனாதானம் என் உயிர் மூச்சு என்று ஒங்கி சொன்னவரும் இவர்தான்.. இன்று பெரியார் சிலையை அகற்றுவேன் என்று சொன்னவரும் இவர்தான்
இதை யாருக்காகவும் அண்ணாமலை கைவிடுவதாகவும் தெரியவில்லை!
இந்த அண்ணாமலையை தேடிவந்திருக்கும் இளைஞர்களும் அவரை கைவிடுவதாகவும் இல்லை.
அதிமுக தலைவர்களையும் , சுலபமாக சமாளித்து 5 வருடங்களை கொள்ளையடித்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைத்த கழகத்தினருக்கு,….இடி போல் வந்து இறங்கினார் அண்ணாமலை.
தங்களால் வருங்காலத்தில் ஏதும் ஊழல் செய்ய முடியாமல் போய்விடுமோ என அச்சம் கொள்ளும் சொந்த கட்சிக்காரா்கள் ஒரு பக்கம் !!
ஏற்கனவே செய்த ஊழலை இவர் அம்பலப்படுத்த தயங்க மாட்டார் என்ற பயத்தில் கூட்டணி கட்சிக்காரா்கள் ஒரு பக்கம்!!
இன்னாருபுறம் தமிழகத்தை முழுவதும் சுரண்டமுடியாமல் தவிக்கும் எதிா்கட்சிகள்..!
இந்த மூவருக்கும் இடையில்.. தனிமனித ஒழுக்கத்திலும், பொது வாழ்விலும், ஒரு நேர்மையான திமிரான மனிதனாய் திகழ்வதே சிறப்பு தான்! அந்த திமிரான மனிதரை ஆதரிப்பதும் ஒரு கர்வம் தான்.!
சரியான ரூட்டில் சரியாகத்தான் போய் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
அரசியலில் நேர்மையை வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது கடினம்.. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.. திமுகவை திமுக பாணியிலேயே தான் கையாள வேண்டும்
மனித வடிவில் திமுக களவாணியை அழிக்க ஒரு IPS அதிகாரியே இறங்கியுள்ளார்- தீயவற்றை அளிக்க கடவுள் மனித வடிவில் வருவார் என்பது இதில் இருந்தே தெரிகிறது
இங்கு தர்மத்தை தாங்க வருபவன் யாரும் தானாக உருவாவதில்லை. அதர்மம் தலைவிரித்தாடும் பொழுது எல்லா இடத்திலும் ஒரு தர்மம் தானே சக்தியாய் உருவாகும்…
ஜெய் ஸ்ரீராம்…🙏🚩
- கலாவதி கலா
திருவரங்கம் ஆலயம் அவ்வப்போது யாரிடமாவது சிக்கி கிடப்பதும் பின் ஒரு மாவீரன் வந்து அதை மீட்டெடுப்பதும் காலம் காலமாக நடப்பது.
அதன் அர்த்தம் என்னவெனில் அறிதுயிலில் இருக்கும் ரங்கன் தான் இங்கேதான் இருக்கின்றேன் என காட்ட நடத்தும் நாடகம் அது.
திருவரங்கத்தில் எல்லாம் அறிந்தும் அறியாதவர்போல் ரங்கன் துயில்கொண்டிருப்பார், அது அறியாமல் அங்கு தெய்வமில்லை என ஆடுவோர் கடுமையாக ஆடுவார்கள், ரங்கன் அதை அறிந்தும் அறியாதது போல் படுத்திருப்பார்.
உரியநேரம் அவரே ஒருவனை அழைத்து அதனை மீட்டெடுப்பார்.
இது வரலாறு முழுக்க நடந்தது.
அது சமணர் காலம் பவுத்தர் காலம் என நடந்தது, பின் மாலிக்காபூர் காலத்தில் நடந்தது, அவுரங்கசீப் தன் பூரண இஸ்லாமிய இந்துஸ்தான் என எழும்போது ஆற்காடு நவாப் காலத்தில் நடக்க இருந்தது, அப்போதெல்லாம் யாரோ வந்து தடுத்து கொண்டே இருந்தார்கள்.
ஆழ்வார்கள் வந்தார்கள், அடியார்கள் வந்தார்கள், கம்பண்ண உடையார், வீரசிவாஜி, மருதுபாண்டியர், இஸ்லாமியன் என்றாலும் கோவில் பக்கம் மசூதிகளை அனுமதியேன் என சொன்ன மருதநாயகம், நவாபுகளை முடக்கிய பிரிட்டிசார் என யாரோ வந்து இங்கு வரும் ஆபத்துக்களை களைவார்கள்.
காலம் அப்படி யாரையாவது அனுப்பி இந்த ஆலயங்களை மீட்டுகொள்ளும்.
அப்படி இப்போது நம் தலைமுறையில் ஒருவரை அனுப்பியிருக்கின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது.
கம்பண்ண உடையாரும், வீரசிவாஜியும், திருமலை நாயக்கனும், மருதுபாண்டியரும் சொன்ன அதே முழக்கங்களை இக்காலத்தில் காலம் அண்ணாமலை மூலம் சொல்ல வைத்திருக்கின்றது.
இது வெறும் வார்த்தை அல்ல, இந்து அரசர்கள் காலத்துக்கு பின்னால் எழும் மகா முக்கியமான எழுச்சியின் வடிவம், சுதந்திர இந்தியாவில் ஒரு தலைவன் அப்படி தைரியமாக முழுங்கும் முதல் தருணம்.
பாரதியின் வரிகளில் சொல்வதென்றால் “எழுந்தது பார் யுகபுரட்சி” 🚩
- பிரம்ம ரிஷியார்