
தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் தென்மாவட்ட மக்களுக்காக தென்னக ரயில்வே கூடுதலாக நான்கு நாட்களுக்கு வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது.
ஏற்கனவே தீபாவளி சிறப்பு ரயிலாக சென்னையில் இருந்து காலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் சேவை ஒரு நாள் மட்டும் விடப்பட்டது. ஆனால் அந்த ரயிலில் உடனே டிக்கெட்டுகள் பதிவாகி காத்திருப்போர் பட்டியல் நானூறைத் தாண்டி விட்டதால் தென்னக ரயில்வே 4 நாட்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை நீட்டித்துள்ளது.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள இன்றைய செய்தி குறிப்பின்படி… வரும் 10,11,13,14 ஆகிய தேதிகளில் காலை 545 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் மதியம் 2 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
இதே நாட்களில் மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11க்கு சென்னை எழும்பூரில் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம் விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு வரும் தென் மாவட்ட ரயில் பயணிகள் இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்.