மிச்சங் புயல் மீட்பு நடவடிக்கை; உதவ தயார் நிலையில் மோடி அரசு: அமித் ஷா!

1723147 amith sha - 2026

மிச்சங் புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மிச்சங் புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் மு.க. ஸ்டாலின். அப்போது, கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்தார்.

உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் தாம் பேசியது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்…

தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர் திரு.என். ரங்கசாமி அவர்கள், ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சவாலான வானிலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன். மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியளித்தேன். ஏற்கனவே NDRF போதுமான அளவுக்கு அங்கே உள்ளது மற்றும் கூடுதல் படைகள் மேலும் உதவிக்கு தயாராக உள்ளன. – என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மீட்பு பணிகளை கண்காணித்து வரும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது…

* பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
* மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும்.
*மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
* நிவாரண பணிகளை மேற்கொள்ள 5,527 மின் ஊழியர்கள் பணி அமர்த்தப் பட்டுள்ளனர். வெளி மாவட்டங்களிலிருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்

  • சென்னையில் பெய்து வரும் அதிகனமழையால் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தம்.
  • மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்,
  • மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் இயங்கும்,
  • சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து மின் துறை ஊழியர்கள் வரவழைப்பு
  • மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பு!

  • ⚡ சென்னையில் படிப்படியாக மீண்டும் மின் சேவை.
  • ⚡ சென்னையில் மழைநீர் குறைந்து வரும் பகுதிகளில் மின் சேவை மீண்டும் வழங்கப்படுகிறது.
  • ⚡ மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
  • ⚡ மழையளவு குறைந்ததாலும் காற்றின் வேகம் குறைந்த நிலையில் படிப்படியாக மின்சாரம் வினியோகிக்கப்படும்.
  • ⚡ தண்டையார்பேட்டை, ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் படிப்படியாக மின்வினியோகம் – என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மீட்பு பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

  • *எங்களது கட்டுப்பாட்டு அறைக்கு தண்ணீர் தேக்கம், தரைதளத்தில் வசிக்கும் முதியோர்கள் பாதுகாப்பு கேட்பது போன்ற புகார்கள் வருகிறது.
  • சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதி கால்வாய்களில் படிப்படியாக தண்ணீர் வெளியேற துவங்கி வருகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதி சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளன.
  • சென்னை பெருங்குடியில் 50 செ. மீ.மழை பதிவாகியுள்ளது.
  • இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் மழை பாதிப்பு குறையும்.
  • சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பிறமவட்டங்களிலிருந்து 5000 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
  • பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கி ரூ.44 லட்சம் மதிப்பிலான குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

  • மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 140 ஆம்புலன்ஸ்கள் சென்னைக்கு வரவழைப்பு. புயல் பாதித்த பகுதிகளுக்கு 15 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 130 ஆம்புலன்ஸ்களில் 300 புகார்கள் கையாளப்பட்டுள்ளன.
    – 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories