
சோழவந்தான்: மதுரை, சோழவந்தான் பகுதிகளில் போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சத்துடனும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒரு வித மன அழுத்தத்துடன் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக , குருவித்துறை, மன்னாடிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்தும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்தும் தினசரி காலையில் பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்த நிலையில், இன்று காலை எட்டு முப்பது மணி அளவில், குருவித்துறையில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லும் 12 38 என்ற எண் கொண்ட93ம்நம்பர் பேருந்து சென்றது. இதில், பேருந்தின் உள்ளே,
மது போதையில் இளைஞர் ஒருவர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் தகாத வார்த்தைகளால் பேசியும், பேருந்தில் இருந்த பயணிகளிடம் குறிப்பாக பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சென்றுள்ளார்.
இதன் காரணமாக சோழவந்தான் வேப்பமர ஸ்டாப்பில் சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை பேருந்தில் இருந்து இறக்கி விட முற்பட்டனர் . ஆனால் ,அவர் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, விவேகானந்த கல்லூரி அருகே பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர். இதனால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகள் ஆகியோர் நிம்மதி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்: காலையிலேயே மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி சீட்டில் உட்கார்ந்து கொண்டு பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
ஆகையால், ஆங்காங்கே காவல்துறையினர் கண்காணித்து இது போன்ற போதை ஆசாமிகளிடம் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.





