கோயில் அருகே இடையூறாக கட்சிக் கொடிகள்… அகற்றப்படுமா?

chozhavanthan - 2026

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.

இந்த வார்டுகளில், சுமார் முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இட நெருக்கடி காரணமாக சோழவந்தானின் புறநகர் பகுதிகளில் விரிவாக்கப் பகுதிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும், சோழவந்தானின் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமப்
படுகின்றன.

குறிப்பாக, பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகளால், நாளுக்கு நாள் இட நெருக்கடி அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கொடிக் கம்பங்களை அமைத்து வைத்திருப்பதால் பொதுமக்களுக்கும் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்
களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

பேரூராட்சிக்கு நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அருகில் கொடி கம்பங்கள் இருப்பதால், குடிநீரை உபயோகப்படுத்துவதற்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இன்னும் சில தினங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் மூன்று மாத கொடியேற்ற விழா நடைபெற்று அதனைத் தொடர்ந்து, வைகாசி திருவிழா தொடங்க உள்ள நிலையில், இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories