இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்கியது. இன்றைய முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தற்போது விளையாடி வருகின்றனர்
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும் அவுட் ஆனாலும், தவான் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இலங்கை அணி சற்றுமுன் வரை 3.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. பெராரா அதிரடியாக 12 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.