நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து திராவிடம் மற்றும் தேசியம் என்ற பாதையில் சென்று கொண்டிருக்கின்றார். அவருக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய பெரியார் சிலை குறித்த கருத்துக்கு கமல் தனது டுவிட்டரில் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு’ இவ்வாறு கமல் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.



