மதுரை: நாடாளுமன்றத்தில், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், செங்கோலை பற்றியும் ,
மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு துறவியர் பேரவை புகார் அடங்கிய மனுவை, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது.
மேலும், தபால் மூலம் தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் தபால் மூலம் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாம்.
துறவியர் பேரவை வழங்கிய மனுவில், மதுரை எம் .பி. சு. வெங்கடேசன் செங்கோல் பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் பற்றியும் நாடாளுமன்றத்தில் தவறாக பேசியதாகவும், அவர் விதியை மீறியதாக, அவர் எம்பி பதவியை ரத்து செய்ய வேண்டும், அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, பேரவை நிர்வாகிகள் மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தன், தலைமையில் நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இந்து துறவிகள் பேரவை, எல்லாம் வல்ல சித்தர் ஆசிரமம், மதுரை என்று குறிப்பிட்டு ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது…
பொருள்: அருள்மிகு சொக்கநாதர் மற்றும் பாண்டிய சேர, சோழன் போன்றவர்கள் செங்கோல் ஏந்தி 1000 பெண்கள் அந்தபுரத்தில் வைத்தது இருந்ததாக அவமானப்படுத்தி பேசி மதுரை வெங்கடேசன் M.P.கண்டித்து
வணக்கங்கள், மேற்கண்ட அமைப்பில் அமைப்பாளராக இருக்கின்றேன். கடந்த இரண்டு நாள் முன்பு பாராளுமன்றத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் தொடர்ந்து தமிழக பண்பாடு கலாசாரம், பாரதபண்பாடு கலாசாரம் அனைத்தையும் அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
ஜனாதிபதிக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரைக்கு பதில் அளிக்கும் படி பேசினார்கள். அருள்மிகு சொக்கநாதர் செங்கோல் ஏந்தி ஆட்சிபுரிந்தார். இப்போழுது பட்டாபிசேக விழா நடத்தபட்டு வருகிறது. 64 திருவிளையாடல் மூலம் மக்கள் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
அதில் பட்டாபிசேக விழா இப்பொழுதும் நடைபெற்று வருகிறது. மற்றும் பாண்டிய மன்னர்களையும் சேர சோழன் மன்னர்களையும் சேதுபதி மன்னர்களையும் செங்கோல் ஏந்தி 1000 பெண்கள் அந்தபுரத்தில் வைத்து உடல் உறவில் ஈடுபட்டார்கள் என மிக மிக கொச்சையாகவும் அவமான படுத்தியும் பேசி இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திய சொற்கள் மிக மிக கொடுரமானது. அவர் தொடர்ந்து அவமானப் படுத்தி பேசி உள்ளார்கள்.
- புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழா சமயத்தில் ராமர் படம் இருந்ததை அவமானப்படுத்தி பேசி இருக்கிறார்கள்
- அடுத்து மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் விழா சமயத்தில் போது முதலிரவு எப்போது என பேசி இருக்கிறார்கள்.
எம்.பியாக உள்ள திரு.வெங்கடேசன் பாரத நாட்டு கலாசாரத்தையும் தமிழக பண்பாட்டையும் கோயில் வழிபாட்டையும் இறைவனையும் இறைவியையும் மற்றும் சேர சோழ பாண்டியர்களையும் மற்றும் அவர்கள் வழி தோன்றல் அனைத்து மக்களையும் மிக மிக கொடுரமாக அவமானபடுத்தி பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார்கள்.
யாரையும் அவமானபடுத்த மாட்டேன் என்று உறுதி மொழி ஏற்ற மதுரை எம்.பி வெங்கடேசன் வேண்டும் என்றே தொடர்ந்து கொடுரமாக அவமான படுத்தி பேசி இருக்கிறார்கள். ஆகையால் எம்.பி வெங்கடேசன் அவர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.