மதுரை அருகே காமராஜர் பிறந்த நாள் விழா
நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .
செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி, கெவின் குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஆண்டனி மைக்கேல் விஜயன், கலந்து கொண்டு மழலையர்களுக்கு இனிப்பு வழங்கினார். முடிவில், அக்ஷிதா நன்றி கூறினார்.
சிறப்பு விருந்தினர்க்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை , ஜெயலட்சுமி, சுபா ஆகியோர் செய்திருந்தனர்.
சோழவந்தான் மேலக்கால் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் மேலக்கால் பகுதியில், காமராஜரின் பிறந்தநாள்
விழா கொண்டாடப்பட்டது.
சோழவந்தான் வேப்பமர ஸ்டாப் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு, இந்து நாடார் உறவின்முறை சார்ந்த பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில், அய்யப்பன் நாயக்கன்பட்டி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி. பி. கந்தசாமி, சோழவந்தான் காமராஜர் உறவின் முறை சங்க செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் மேலக்கால் நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் மணிகண்டன் மற்றும் சோழவந்தனை சேர்ந்த சரவணன் ஐயப்ப ராஜா பாண்டித்துரை மேலக்கால் அழகர் நாகராஜ் பாண்டி பாலா மகளிர் அணி சேர்ந்த சித்ரா மங்கையர்க்கரசி கிருஷ்ணவேணி மல்லிகா மற்றும் இந்து நாடார் உறவின் முறை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள்
என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்ட து. தொடர்ந்து, மேலக்கால் நாடார் இளைஞர் பேரவை சார்பில் மேலக்கால், கிராமத்தில் காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி
மரியாதை செய்யப்பட்டது. இதில், நாடார் இளைஞர் பேரவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
விக்கிரமங்கலம் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா
மதுரை, விக்கிரமங்கலம் பகுதியில், கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது . முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
விக்கிரமங்கலத்தில் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு ,
மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின் முறைத் தலைவர் ராஜேந்திரன், செயல் தலைவர் வையாபுரி, பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தர பாண்டியன், உப செயலாளர் நாகராஜ் என்ற மனோகரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளி மற்றும் கேரன் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளி ஆகிய பள்ளிகளில், பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக், பேனா உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மாலை
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு, திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது . வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாலம், செந்தில், செல்வராணி, ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, அவைத் தலைவர் தீர்த்தம் முன்னால் பேரூராட்சி தலைவர் ஐயப்பன், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி ,நிஷா கௌதம ராஜா, முத்துலட்சுமி, சதீஷ் சிவா நிர்வாகிகள் மில்லர், சங்கங்கோட்டை ரவி, சந்திரன், நூலகர் ஆறுமுகம், மற்றும் சோழவந்தான் பேரூர் கழக வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.