January 25, 2025, 1:33 AM
24.9 C
Chennai

ஜெர்மனியில் ஸ்பெயின் கைப்பற்றிய யூரோ கால்பந்து கோப்பை!

யூரோ கால்பந்துக்கோப்பை 2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஜெர்மனியில் யூரோ கோப்பைப் போட்டி

          டி20 உலகக் கொப்பை கிரிக்கட் போட்டி நடந்துகொண்டிருக்கும்போது யூரோ கால்பந்துக் கோப்பை போட்டி 14 ஜூன் 2024 முதல் 14 ஜூலை 2024 வரை ஜெர்மனியில் நடந்தது. 24 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ஜியார்ஜியா அணி முதன் முறையாகக் கலந்துகொண்டது. யூரோ கோப்பை ஜெர்மனியில் நடப்பது இது மூன்றாவது முறையாகும். ஆனால் ஒருங்கிணைந்த ஜெர்மனியில் நடப்பது முதல் முறை. 1988ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியில் நடந்தது.

          இத்தாலி சென்ற முறை கோப்பை வென்றது நினைவிருக்கலாம். ஆனால் இந்த முறை இத்தாலி காலிறுதிச் சுற்றிற்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. போட்டியை நடத்துகின்ற ஜெர்மனி, இந்த முறை காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோற்று வெளியேறியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

ஆட்டம் நடந்த முறை

          விளையாடிய 24 அணிகளும் ஆறு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் B பிரிவில் ஸ்பெயின், க்ரோஷியா, இத்தாலி, அல்பேனியா ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் C பிரிவில் ஸ்லோவினியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் D பிரிவில் போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, ஃப்ரான்சு ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப் E பிரிவில் பெல்ஜியம், ஸ்லோவாகியா, ரோமானியா, உக்ரேன் ஆகிய அணிகள் இடம்பெற்றன. குரூப்  F பிரிவில் துருக்கி, ஜியார்ஜியா, போர்ச்சுகல், செக் குடியரசு ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.

ALSO READ:  கார்த்திகை முதல் நாள்; சபரிமலை பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ஏற்பு!

முதல் சுற்று – லீக் சுற்று

முதல் சுற்று ஆட்டங்கள் ஜூன் 14 முதல் 26ஆம் தேதி வரை நடந்தன. இதன் முடிவில் குரூப் A பிரிவில் ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. குரூப் B பிரிவில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.  குரூப் C பிரிவில் மூன்று அணிகள் தேர்வாயின. அவை இங்கிலாந்து (5 புள்ளிகள்), டென்மார்க் (3 புள்ளிகள்), ஸ்லோவினியா (3 புள்ளிகள்) அணிகளாகும். குரூப் D பிரிவிலும் மூன்று அணிகள் தேர்வாயின. அவையாவன ஆஸ்திரியா (6 புள்ளிகள்), ஃபிரான்சு (5 புள்ளிகள்), நெதர்லாந்து (4 புள்ளிகள்).

          குரூப் E பிரிவிலும் குரூப் F பிரிவிலும் மூன்று அணிகள் தேர்வாயின.  குரூப் E பிரிவில் ரோமானியா (4 புள்ளிகள்), பெல்ஜியம் (4 புள்ளிகள்), ஸ்லோவாகியா (4 புள்ளிகள்)  குரூப் F பிரிவில் போர்ச்சுகல் (6 புள்ளிகள்), துருக்கி (6 புள்ளிகள்) ஜியார்ஜியா (4 புள்ளிகள்) ஆகிய அணிகள் தேர்வாயின.

நாக்-அவுட் சுற்று ரவுண்ட் ஆஃப் 16

          இந்தச் சுற்று 29 ஜூன் முதல் ஜூலை ஒன்று வரை நடந்தது. இந்தச் சுற்றின் மிகப்பெரிய அப்செட் சுவிட்சர்லாந்து அணியிடம் நடப்பு சாம்பியன் இத்தாலி அணி தோற்றதுதான். காலிறுதிச் சுற்றிற்கு ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுகல், ஃபிரான்சு, நெதர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அணிகள் தேர்வாயின.

ALSO READ:  பொங்கல் கொண்டாட்டம்; வருமான வரித் துறை அலுவலகத்தில் வடிவேலு!

காலிறுதிச் சுற்று

காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 5 மற்று 6 தேதிகளில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஜெர்மனி  அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஃபிரான்சு அணியிடம் பெனால்டி கார்னர் முறையில் 5-3 என்ற கோல்கணக்கில் தோற்றாது. மூன்றாவது ஆட்டத்தில் நெதர்லாந்து அணி துருக்கி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சுவிட்சர்லாந்து  அணியை பெனால்டி கார்னர் முறையில் 5-3  என்ற கோல் கணக்கில் வென்றது.

அரையிறுதி ஆட்டங்கள்

          அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 9 மற்று 10 தேதிகளில் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ஃபிரான்சு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இறுதி ஆட்டம்

          இறுதி ஆட்டம் பெர்லினில் ஜூலை 14ஆம் தேதி அன்று நடந்தது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாத்யில் 47ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் நிகோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்தார். இங்கிலாந்தின் கோல் பாமர் 73ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால் ஸ்பெயினின் மிகேல் ஒயர்ஸபால் 86ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

ALSO READ:  சபரிமலை நடை அடைப்பு; மீண்டும் நவ. 15ல் மண்டல பூஜைக்காக திறப்பு!

          ஸ்பெயின் நான்காவது முறையாக யூரோ கோப்பையைக் கைப்பற்றியுள்ளது, இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது.  கோப்பையை வென்ற அணிக்கு ஏறத்தாழ 2575 மில்லியன் ரூபாய் பரிசாகக் கிடைத்திருக்கிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!