காமராஜர், விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!
மதுரை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 122 ஆவது பிறந்த நாள் மற்றும் தவெக விஜய் 50 வது பிறந்த நாள் பொன்விழாவினை முன்னிட்டும், விளக்குத்தூண் அருகே அமைக்கப்பட்டுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு விஜய் கல்லனை அன்பன் மற்றும் பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து யானைமலைக் குவாரி அருகே உள்ள டான் போஸ்கோ துவக்கப்பள்ளியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட் புக், தட்டு, டம்ளர் மற்றும் நலத் திட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா த.வெ.க மாநில உறுப்பினர் சேர்க்கை துணைச் செயலாளரும் வடக்கு மாவட்டத் தலைவருமான விஜயன்பன் கல்லணை தலைமையில் வழங்கப்பட்டது.
மேலும், த.வெ.க நிர்வாகிகள் பாண்டியராஜன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மனோகர் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், த.வெ.க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.