டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக வர்ணிக்கப்படும் இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்சும், 7-ம் நிலை வீராங்கனையான உக்ரைனை சேர்ந்த எலினா ஸ்விடோலினாவும் மோதினர். இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்விடோலினா வெற்றி பெற்றார். 46 ஆண்டுகால பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் உக்ரைன் வீராங்கனை ஒருவர் இந்த கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
பெண்கள் டென்னிஸ் போட்டி – உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari