மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப் பூரம் விழா சிறப்பாக நடந்தது .
இவ்விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உட்பட 21 அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. வளையல்,ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து , ஆடிப்பூர நிகழ்ச்சியை நடத்தினர் சண்முகவேல்
பூசாரி பூஜைகள் செய்தார்.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்து அம்மனை தரிசித்தனர். திருக்கோவில் சார்பாக வழங்கப்பட்ட வளையல், ஜாக்கெட்துணி மற்றும் பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் அர்ச்சகர் சண்முகவேல் பூபதி,கவிதா, வசந்த் மற்றும் பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதேபோல், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் கோவிலை சுற்றி வந்தது. இதைத்
தொடர்ந்து, அம்மன் சன்னதியில் ஆடிப்புரம் படி ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அர்ச்சகர் செந்தில் ஆடிப்பூர நிகழ்ச்சிகளை நடத்தி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் மற்றும் கிராமமக்கள், அகிலாண்டஈஸ்வரிஅம்மன் மகளிர்குழு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளும் உலா வந்தது. உச்சி மகாகாளியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாவித்தார். சோழவந்தான் திரௌபதி அம்மன்
கோவில், பத்ரகாளியம்மன் கோவில் காடுபட்டி,
திரௌபதி அம்மன்கோவில் மேலக்கால் காளியம்மன் கோவில்உள்பட இப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிபூரம் விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்து பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.
சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு இங்குள்ள ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரவு கேடயத்தில் ஆண்டாள் அலங்காரமாகி வீதி உலா நடந்தது. அர்ச்சகர் பார்த்தசாரதி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். செயல் அலுவலர் சுதா,கோவில் பணியாளர் முரளிதரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் மற்றும் காடுபட்டி
போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.