மதுரை-தாம்பரம் ஒருவழி சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது.
செங்கோட்டை தென்காசி சங்கரன்கோவில் ராஜபாளையம் ஸ்ரீ வில்லிபுத்தூர் சிவகாசி விருதுநகரில் இருந்து பயணிகள் பயணிக்க குருவாயூர் மதுரை இணைப்பு ரயில் உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
நாளை(27.08.24) மதுரையிலிருந்து இரவு 08.50 மணிக்குக் கிளம்பி திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக காலை 06.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் இந்த சிறப்பு ரயில்.
இந்த சிறப்பு ரயிலில் செல்ல விரும்புபவர்கள், மாலை மதுரை செல்லும் குருவாயூர்-மதுரை விரைவு வண்டியில்(16328) ஏறி இரவு 07.15 மணிக்கு மதுரையை அடைந்து சிறப்பு ரயிலில் பயணிக்கலாம்.
தொடர் விடுமுறை, விழாக்கால நெரிசல் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.