சோழவந்தான்.
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14 என ஏற்கனவே அறிவித்தது. தற்போது மூன்று மாதம் கூடுதல் அவகாசமாக டிசம்பர் 31 வரை ஆதார் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதில், ஆதார் புதுப்பித்துக் கொள்ள அரசு இ- சேவை மையம், தபால் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை அரசு குறிப்பிட்டுள்ள நிலையில் பொதுமக்களிடையே குழப்பமான நிலையே நிலவி வருகிறது.
ALSO READ: நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்புப் பணி தொடக்கம்!
குறிப்பாக, ஆதார் எண்ணை புதுப்பிக்க தபால் நிலையம் செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதாகவும் , தங்களது வழக்கமான பணிகளை முடித்த பின்பே ஆதார் சம்பந்தப்பட்ட பணிகளை பார்க்க முடியும் என, அலுவலர்கள் கூறுவதாகவும் இசேவை மையங்களிலும் வழக்கமான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகையால், மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒவ்வொரு ஊராட்சி பேரூராட்சி நகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்களை அமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் ஆதார் புதுப்பிக்க வழி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
அவ்வாறு புதுப்பிக்கும் நிலையில் அதிகமான பொதுமக்கள் முகாம்களில் வந்து தங்கள் ஆதார் புதுப்பிக்க வாய்ப்பு ஏற்படும் விடுபட்டவர்களுக்கு தனியாக சிறப்பு முகாம்களையோ, அல்லது ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தபால் அலுவலகங்கள், இ- சேவை மையங்கள் மற்றும் மற்ற இடங்களில் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கலாம்.
இது பொது மக்களின் சிரமங்களை குறைக்கும் எனவும் பொதுமக்கள் அலைக்
கழிக்கப்படுவதை தவிர்க்கும் சூழ்நிலை ஏற்படும் என, கூறுகின்றனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.