மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய அன்புமணி ராமதாஸ், மது ஒழிப்பு விஷயத்தில் பாமக., பிஎச்டி., ஆனால் திருமாவளவன் இப்போதுதான் எல்கேஜி என்று குறிப்பிர்டார்.
மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது.
தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளை மூடி , மது விற்பனை நேரத்தை குறைக்க காரணமாக இருந்த கட்சி பாமக: பாமக மகளிரணியில் மட்டும் 15 ஆயிரம் பெண்கள் மதுக் கடைகளை உடைத்து சிறை சென்றுள்ளனர்…
- மது ஒழிப்பில் பாமக Phd , திருமாவளவன் LKG : மாநாட்டிற்கு அழைப்பு விடுக்காவிட்டாலும் , மாநாடு நடத்தும் திருமாவளவனுக்கு எங்களது ஆதரவு உண்டு
- மது ஒழிப்பில் திருமாவளனுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் முதலில் எங்களிடம்தான் வந்திருப்பார்: தமிழகத்தில் மதுவால் அதிகம் பாதிக்கப்பட்டோவோர் மக்கள் தொகையில் 40 சதவீதம் உள்ள வன்னியரும் பட்டியலினத்தவருமே
- மது ஒழிப்பு குறித்து பேசும் திருமாவளவன் டாஸ்மாக் நிறுவனத்துக்கு 40 சதவீத மதுவை விநியோகிக்கும் மதுஆலை முதலாளிகள் டிஆர்.பாலு, ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தது ஏன்?
திருமாவளவன் தனது மது ஒழிப்பு மாநாட்டுக்கு கனிமொழிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்: மதுவால் அதிக விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்பதை கனிமொழி தனது அண்ணன் ஸ்டாலினிடம் கூற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்த வேண்டும்.
முதலமைச்சரின் அமெரிக்க பயணம் மூலம் 19 நிறுவனங்கள் தமிழகத்தில் 7600 கோடி முதலீடு செய்யும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களைப் பொறுத்தளவில் முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தை தோல்வியாகத்தான் பார்க்கிறோம்.
மற்ற மாநில முதல்வர்கள் 5..6 நாளில் 30ஆயிரம் 50 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் 17 நாளில் 7600 கோடிக்குத்தான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கூட போட்டுள்ளார்.
மதுக்கடையை உடனடியாக மூடினால் தமிழகத்தின் சூழல் மோசமாகிவிடும் என்று பேசி மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தமிழக மக்களை கொச்சைப்படுத்தியுள்ளார்.
திராவிடக் கட்சிகளின் 57 ஆண்டுகால ஆட்சியில் மது இல்லாமல் தமிழக இளைஞர்கள் இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்கியதுதான் திராவிட மாடல்.
படிப்படியாகவேனும் மதுவிலக்கை கொண்டு வருவீர்களா என பாமக தொடர்ந்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி வருகிறது.
2016 ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று பேசினார் , இன்று ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு குறித்து பேச மறுக்கிறார் , கனிமொழி யும் 3 ஆண்டுகளாக மவுனமாக உள்ளார்.
மது இல்லாமல் ஆட்சி நடத்த முடியாதா.. இதை விட வேறு கேவலம் என்ன..? மதுவை விட மோசமான சூழலாக போதைப் பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. பள்ளிக் கூட மாணவர்களே கூல் லிப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை அருகே செயல்படுத்தப்பட உள்ள கோவளம் ஹெலிகாப்டர் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் , தமிழகத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வரும் பகுதி சென்னைதான். சென்னையை சுற்றியுள்ள கும்மிடிபூண்டி , கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளில் பிற பகுதியை விட 3 மடங்கு அதிக பறவைகள் வருகிறது. கோவளம் ஹெலிகாப்டர் திட்டம் பறவைகளுக்கும் அங்கு வசிப்பவர்களுக்கு பதிப்பு ஏற்படுத்தும்
பாமக சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி , 36 ஆண்டுகளாக 6 இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்துள்ளது பாமக , பட்டியலின மக்களுக்கு அகில இந்திய அளவிலும் , அருந்ததியர் ,இசுலாமியர் உள் ஒதுக்கீடுகளையும் , 115 சமூகங்களுக்கான MBC இட ஒதுக்கீடு , obc சமூகங்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடையும் பெற்றுத்தந்த கட்சி.
திருமாவளவன் பாமகவை சாதிக் கட்சி என தொடர்ந்து இழிவு படுத்துகிறார் . திருவமாவளவன் அதை தவிர்க்க வேண்டும். எங்களாலும் அவரைப் போல் பேச முடியும் , பாமகவை இழிவு படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள் திருமாவளவன் , நீங்கள் மது ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டுமானால் நடத்தி கொள்ளுங்கள். மது ஒழிப்புக்காக யார் மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம் , மது ஒழிப்பு மாநாடு நடத்துவதற்காக திருமவளனையும் ஆதரிக்கிறோம் , அவர் எங்களை அழைக்காவிட்டாலும் பரவாயில்லை , ஆனால் மது ஒழிப்பில் பாமக PhD என்பதையும் திருமாவளவன் இப்போதுதான் Lkg என்பதையும் கூறிக்கொள்கிறோம்.
மருத்துவர் ராமதாஸ் கட்சி தொடங்கும் முன்பே 1980லேயே மது ஒழிப்பு போராட்டங்களில் நடத்தினார். இன்று அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு குறித்து பேச காரணம் ராமதாஸ்தான் .
மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாமக வை சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் சிறை சென்றுள்ளளனர் , தமிழகத்தில் 3321 மது கடைகளையும் இந்திய அளவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும் சட்டப் போராட்டம் நடத்தி மூடியுள்ளோம். மது விற்பனை நேரத்தை குறைத்தோம் , சாராயக் கடைகளை உடைத்தோம் , அதற்காக இன்னும் வழக்குகள் எங்கள் மீது உள்ளது. நான் மத்தியில் அமைச்சராக இருந்தபோது தேசிய மதுக் கொள்கையை கொண்டுவந்தேன். மது ஒழிப்பு குறித்து ஐநாவில் தீர்மானம் கொண்டுவரப்பட காரணமாக இருந்தேன். ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்
திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க கனிமொழியை அழைக்க வேண்டும் , மது விற்பனை காரணமாக இந்தியாவில் அதிக விதவைகள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள் என அவரது அண்ணன் ஸ்டாலினிடம் சென்று கனிமொழியை பேச சொல்லுங்கள் . மது ஒழிப்பு என்பது வெறும் விளம்பர பிரச்சனை கிடையாது.
மது ஒழிப்பில் திருமாவளவனுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் அவர் எங்களிடம்தான் வந்திருப்பார்.
ஏனென்றால் தமிழகத்தில் அதிகமாக மது அருந்தும் சமூகமாக மக்கள் தொகை 40 சதவீதமாக உள்ள வன்னியர் , பட்டியல் சமூகம்தினர்தான் இருக்கின்றனர்.
மத்திய நிதி அமைச்சர் நல் எண்ணத்தில்தான் கோவையில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு நடத்தினார். சந்திப்பிற்கு பிந்தைய சர்ச்சைகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற திருமாவளவனின் பதிவு சரியாதுதான் , அவர் ஏன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க கூடாது . எல்லா கட்சியும் தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றுதான் கட்சி தொடங்கினர். திமுக கோபப்படும் என்பதால் அந்த பதிவை அவர் நீக்கியதுதான் தவறு.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 4 லிருந்து 6 வது இடத்துக்கு சரிந்துள்ளது. நாடு முழுவதும் மது ஒழிப்பை கொண்டு வருவது குறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம். மது மாநிலப் பட்டியலில் உள்ளது. அனைத்து மாநிலங்களும் படிப்படியாகவேனும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
45 ஆண்டுகளாக மதுவின் பாதிப்பை நேரில் பார்த்தவர்கள் நாங்கள் . கள்ளக்குறிச்சியில் இறந்த 67 ல் 62 பேர் பட்டியலினத்தை சார்ந்தவர்கள். தமிழக அரசு மதுவை விற்கவில்லை , திணிக்கிறது.
திருமாவளவனுக்கு மது ஒழிப்பில் ஆர்வம் இருந்தால் மது ஆலை முதலாளிகளான டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்தது ஏன்..? தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு தலா 20 விழுக்காடு மதுவை இருவரும்தான் மது ஆலை மூலம் சப்ளை செய்கின்றனர்… என்று பேசினார்.