புது தில்லி:
டிடிவி தினகரன், தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை இன்று தில்லி உயர் நீதிமன்றம் இன்று காலை வழங்குகிறது.
அதிமுக.,வில் இருந்து ஓரங்கட்டப் பட்ட டிடிவி தினகரன், கட்சிச் சின்னமும் கொடியும் பயன்படுத்த இயலாத நிலையில், சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் நின்று போட்டியிட்டு ஆர்கே நகர் தொகுதியில் வென்றார். அவ்வாறு வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தையாவது தாம் நிரந்தரமாக வைத்துக் கொள்ளலாம் என்று கருதி தனக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்கக் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டிடிவி தினகரன்.
தில்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தொடர்ந்த வழக்கில், இந்த வழக்குக்கு தேவையான அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் இந்த மனு மீது தீர்ப்பு வழங்குகிறது தில்லி உயர்நீதிமன்றம்.