
கரூர் அருகே மண்மங்கலம் பகுதியில் தேசிய சாலைப்பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்
கரூர் அருகே மண்மங்கலம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு அதில், ஒரு பகுதியாக மண்மங்கலம் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகங்கள் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.
இந்நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஒன்று பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தப்பட்டது. இதில் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்மங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்