
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு – இந்திய மாணவியின் விசா ரத்து . அமெரிக்கா அரசு அதிரடி. இது அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய அக்கறையின் வெளிப்பாடு.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்த நிலையில் அந்த மாணவி தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்று இந்திய தமிழக ஊடகங்களில் செய்தி வருகிறது. இது இந்திய ஊடகங்களின் சில்லறை தனத்தின் சான்று.
விசா ரத்து செய்த பிறகு அவர் அங்கு தங்கியிருந்தால் சட்டவிரோத குடிபுகல் குடியேறல் விதியின்படி அவர் கைது செய்யப்பட்டு அமெரிக்கா சிறையில் அடைக்கப்படுவார். அமெரிக்க நீதிமன்றத்தில் கிடைக்கும் தண்டனை அவர் வாழ்நாளில் பாதியை அமெரிக்க சிறையில் கழிக்கும்படியாக கூட இருக்கலாம்.
நகர்ப்புற வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சிக்கு கௌரவ படிப்பிற்காக போன மாணவிக்கு இந்த சட்டவிதிகள் நிச்சயம் தெரிந்திருக்கலாம் அல்லது யாரேனும் எச்சரித்து இருக்கலாம். அந்த எச்சரிக்கை உணர்வில் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறி இருக்கிறார்.
ஆனால் ஏதோ அந்த மாணவிக்கு எவ்வளவு பெருந்தன்மை? பாருங்கள். .தன்மானம் உள்ளவர். அதனால் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறினார் என்ற கருத்தியலை உருவாக்கும் விதமாக இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவது இந்த உலகில் எப்படி எந்த காலத்திலும் பாகிஸ்தான் திருந்தாதோ? அப்படியே இந்திய ஊடகங்களும் உருப்படாது என்பதையே இந்த செய்தி காண்பிக்கிறது.
ஒருவேளை US AID என்ற பெயரில் பாரத நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை உருவாக்குவதற்காக தேச விரோத சக்திகள் எல்லாம் ஒன்றிணைத்து பெரும் சில்லறையை வாரி இறைத்து இங்கு ஒரு குழப்பத்தை உருவாக்க அமெரிக்காவின் சில சக்திகள் முயன்றதே . அதில் பெரும் பலன் அடைந்தவர்களில் இந்தியாவில் உள்ள எதிர்க் கட்சிகளுக்கு அடுத்து இருப்பவர்கள் ஊடக வாதிகள் என்ற போர்வையில் இருக்கும் இந்து இந்திய விரோதிகள் தான்.
அந்த வகையில் பாதிக்கப்பட்ட சக ஊடகவாதிகளின் மன காயத்திற்கு மருந்திட இந்த கருத்தியலா? .
இல்லை பெரும் வரும்படி நின்று போன எரிச்சல் அந்த வருமானத்தை நிறுத்திவிட்ட ட்ரம்ப் அரசுக்கு எதிராக தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்காக இந்த செய்தியை இந்திய ஊடகங்கள் பயன்படுத்த அந்த மாணவி தன்மானத்தோடு அமெரிக்காவை விட்டு வெளியேறும் கருத்தியலில் செய்தி வெளியிடுகிறதா?
உண்மையில் இவர்கள் பொறுப்புள்ள ஊடகங்களாக இருந்தால் படிப்பதற்காக வெளிநாடு போன இடத்தில் அந்த நாட்டுக்கு எதிரான கொள்கை உடைய ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பை இந்த மாணவி எதற்காக ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி இருப்பார்கள்.
இவர் அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை கொண்டவரானால் எதற்காக அமெரிக்காவிற்கு படிக்கப் போனார்? இவரின் பின்னணி என்ன? என்ற கேள்வியை முன் வைத்திருப்பார்கள்.
அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான நட்பில் இருக்கும்போது மோடி எனது நண்பன் என்று அமெரிக்கா அதிபர் பகிரங்கமாக சகோதர உணர்வோடு குறிப்பிடும்போது இந்தியாவிலிருந்து போய் அமெரிக்காவிலிருந்து கொண்டு அந்த நாட்டிற்கு எதிரான ஒரு பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பது இருநாட்டு உறவில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதானே? அப்படியானால் இவளின் உண்மையான நோக்கம் இந்தியாவுக்கு எதிரான சதியா? இந்திய அமெரிக்க உறவை கெடுக்கும் சக்திகளின் கைப்பாவையா இவள் ? என்று கேட்டிருக்க வேண்டும்.
தேசப்பற்று உள்ள ஊடகங்களாக இருந்திருந்தால் அந்த மாணவியின் பின்னணி என்ன?. ஹமாஸ் அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாத அமைப்பு மட்டுமல்ல. அது இந்தியாவிற்கும் எதிரானது தான். பாரதத்தில் காஷ்மீர் பிரிவினையை உள் நாட்டு பயங்கரவாதத்தை பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரித்த ஆதரிக்கும் ஒரு அமைப்பு தான் ஹமாஸ்.
அப்படிப்பட்ட ஒரு அமைப்பை இவர் ஆதரிக்கிறார் என்றால் இவளின் பின்னணி என்ன? இவளுக்கு தேசவிரோத சக்திகள் பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பார்கள்
கொஞ்சமேனும் இந்த நாட்டின் பாதுகாப்பு மக்களின் நலன் பாதுகாப்பு பற்றிய அக்கறை இருந்தால் மாணவர்களே! படிக்கும் வயதில் உங்களின் ஒழுக்கம் படிப்பு பாதுகாப்பு குடும்ப பாதுகாப்பு கடந்து வேறு எவரோடும் தேவையில்லாத தொடர்புகள் வேண்டாம். அது உங்களை தேவையில்லாத சிக்கலில் கொண்டு போகும் என்று எச்சரிக்கை விடுப்பார்கள்..
பெற்றோர்களிடம் உலகம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களை மூளை சலவை செய்தும் கட்டாயமாக கடத்திப் போய் – போதை – கடத்தல் – தேசவிரோத – பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதும் அதனால் அவர்கள் பயங்கரவாதிகளாக உருவெடுப்பதும் பல இடங்களில் உயிரிழப்பதும் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
அந்த செய்திகளை குறிப்பிட்டு பெற்றோர்களே.உங்களின் குழந்தைகள் நலனுக்கும் தேச நலன் கருதியும் தயவு செய்து அவர்களை கண்காணியுங்கள் . அவர்கள் பிரிவினைவாத தேசவிரோத பயங்கரவாத அமைப்புகளின் பிடிக்குள் போகாமல் அவர்களை பத்திரமாக பாதுகாத்திடுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
ஆனால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற பெயரில் இருக்கும் இந்திய ஊடகங்கள் தேசத்தை உள்ளிருந்தே அரிக்கும் நோய் கிருமிகளுக்கும் இங்கேயே உண்டு கொழுத்து இந்த தேசத்தை சிதைக்க வேண்டும் என்று வன்மத்தோடு அலையும் விஷஜந்துக்களுக்கும் சாமரம் வீசி அவர்களை நாயகர்களாக சித்தரிக்கும் கேவலமான செய்கையை ஊடக வாதிகள் என்ற பெயரில் செய்கிறார்கள். அதற்கு கண் கண்ட சாட்சியம்தான் இந்த செய்தியின் கருத்தியல்.
இவ்வளவிற்கும் மத்திய செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் மறந்தும் தங்களை கண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ மாட்டார் என்ற நம்பிக்கையாக கூட இருக்கலாம். ஆனந்த விகடன் மீது நடவடிக்கை எடுத்த போது வாய் கிழிய பேசியவர்கள் யாரும் இதை கண்டிக்க கூட மாட்டார்கள். காரணம் எல்லோரும் கூட்டு களவாணிகள்.
ஊடகவாதிகளே ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையில் உங்களைப்போல தரமற்ற மனிதர்களால் தான் தேசத்தை அரிக்கும் புற்றுநோய் போல மாறி வருகிறது. திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள்.
— ஜான்சி ராணி ஹிந்துஸ்தானி.