
இன்று சூரிய நகர்வின் அடிப்படையில் நாள்காட்டியை நிர்ணயிக்கும் காலக்கணக்கீட்டைக் கடைப்பிடிக்கும் மக்கள் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி வருகின்றன. அவற்றில் தமிழ்ப் புத்தாண்டும் ஒன்று. இன்றைய நாளை விஷு புத்தாண்டு என்று தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்திலும் கொண்டாடுகின்றார்கள். அதன்படி, தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துகள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் – என்று எக்ஸ் தள பதிவில் தமிழில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
புத்தாண்டு திருநாளில் தமிழ்நாட்டிலுள்ள சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புனிதமான சடங்குகளுடன் ஒரு நம்பிக்கையோடு புத்தாண்டை நாம் வரவேற்கும் போது, இந்த நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்கான அனைத்து நன்மைகளையும் அளிக்கட்டும். – என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும். புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும். #அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047 -க்கான வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்.” – என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தரணியெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், அன்பும் நிரம்ப, இனிமை தரும் உறவுகள் மலர, வாழ்க்கை நம்பிக்கையோடு ஒளிர, இந்த விசுவாவசு வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல தொடக்கமாக அமைய இறைவனை பிரார்த்திப்போம்! – என தமிழக பாஜக., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புத்தாண்டு, அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், அளிக்கும் ஆண்டாகவும், அனைவரின் வாழ்விலும், அன்பும், அமைதியும் பெருகும் ஆண்டாகவும், புதிய தொடக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் ஆண்டாகவும் அமையட்டும். இனிய விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். – என்று தமிழக பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் வாழும் சனாதன உறவுகள் அனைவருக்கும் இனிய விசுவாவசு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!! அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், நிம்மதியும் நீக்கமற நிறைந்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்..!! – என பாஜக., மூத்த தலைவர் ஹெச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.