
ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 13.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ராஜஸ்தான் vs பெங்களூர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (173/4, ஜெய்ஸ்வால் 75, துருவ் ஜுரல் 35, ரியன் பராக் 30, சஞ்சு சாம்சன் 15, புவனேஷ் குமார், யஷ் தயாள், ஹேசல்வுட், க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (17.3 ஓவர்களில் 175/1, பில் சால்ட் 65, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 62, தேவதத் படிக்கல் ஆட்டமிழக்காமல் 40, குமார் கர்திகெய சிங் 1/25) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் யசஷ்வீ ஜெய்ஸ்வால் (47 பந்துகளில் 75 ரன், 10 ஃபோர், 2 சிக்சர்), மற்றும் சஞ்சு சாம்சன் (19 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர்.
அதன் பின்னர் ஆட வந்த ரியன் பராக் (22 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் துருவ் ஜுரல் (23 பந்துகளில் 35 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி நான்கு விக்கட் இழப்பிற்கு 173 ரன் எடுத்தது.
174 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (33 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் விராட் கோலி (45 பந்துகளில் 62 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
பில் சால்ட் 8.4ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் ஆடவந்த தேவதத் படிக்கல் (28 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) கோலியுடன் இணைந்து ஆடி 17.3 ஓவர்களில் 175 ரன் எடுத்து பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மும்பை vs டெல்லி
மும்பை இந்தியன்ஸ் அணி (205/5, ரியன் ரிக்கிள்டன் 41, சூர்யகுமார் யாதவ் 40, திலக் வர்மா 38, ரோஹித் ஷர்மா 18, விப்ராஜ் நிகம் 2/41, குல்தீப் யாதவ் 2/15) டெல்லி கேபிடல்ஸ் அணியை (19 ஓவர்களில் 193, கருண் நாயர் 89, அபிஷேக் போரல் 33, கே.எல். ராகுல் 15, அஷுதோஷ் ஷர்மா 17, விப்ராஜ் நிகம் 14, கர்ண் ஷர்மா 3/36, மிட்சல் சாண்ட்னர் 2/43, பும்ரா 1/44, ) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (12 பந்துகளில் 18 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரியன் ரிக்கிள்டன் (25 பந்துகளில் 41 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்), திலக் வர்மா (33 பந்துகளில் 59 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்), நமன் திர் (17 பந்துகளில் 38 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) என அனைவருமே சிறப்பாக ஆடினர்.
அதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் மும்பை அணியின் ஒரு நல்ல பேட்டிங் பர்ஃபார்மன்ஸ்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாக விளையாட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் மெகர்க் இன்னிங்க்சின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் போரல் (25 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) கருண் நாயர் (40 பந்துகளில் 89 ரன், 12 ஃபோர், 5 சிக்சர்) உடன் இணைந்து விளையாடி இரண்டாவது விக்கட்டுக்கு 119 ரன் சேர்த்தார்.
அதன் பிறகு விக்கட்டுகள் மள மல என விழத் தொடங்கின. கே.ஏல். ராகுல் (15 ரன்), அக்சர் படேல் (9 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), விப்ராஜ் நிகம் (14 ரன்), குல்தீப் யாதவ் (1 ரன்), மோஹித் ஷர்மா (பூஜ்யம் ரன்), மிட்சல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 1 ரன் என டெல்லி அணி வீரர்கள் மும்பை அணி வீரர்களின் பந்து வீச்சையும் ஃபீல்டிங்கையும் சமாளிக்க முடியாமல் 19 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவினர்.
மும்பை அணியின் சுழல்பந்துவீச்சாளர் கர்ண் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

13.04.2025 இரவு வரை நடந்த ஆட்டங்களுக்குப்பின்னர் புள்ளிகள் பட்டியல்
அணி | மேட்ச் | வெற்றி | தோல்வி | புள்ளி | நெட் ரன் ரேட் |
குஜராத் | 6 | 4 | 2 | 8 | 1.081 |
டெல்லி | 5 | 4 | 1 | 8 | 0.899 |
பெங்களூரு | 6 | 4 | 2 | 8 | 0672 |
லக்னோ | 6 | 4 | 2 | 8 | 0.162 |
கொல்கொத்தா | 6 | 3 | 3 | 6 | 0.803 |
பஞ்சாப் | 5 | 3 | 2 | 6 | 0.065 |
மும்பை | 6 | 2 | 4 | 4 | 0.104 |
ராஜஸ்தான் | 6 | 2 | 4 | 4 | -0.838 |
ஹைதராபாத் | 6 | 2 | 4 | 4 | -1.245 |
சென்னை | 6 | 1 | 5 | 2 | -1.554 |