December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

tamilnadu waqf board - 2025

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ஃப் வாரியத்தை கண்டிப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை…

சமீபத்தில் வக்ஃப் வாரிய திருத்தத் சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் இறைவங்காடு என்ற கிராமத்தில் வசிக்கும் 150 இந்து குடும்பங்களின் பூர்வீக சொத்துக்கள் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தம் எனவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய அநீதியை எதிர்த்து எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஊர் ஊராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். ஆனால் வேலூர் இறைவங்காடு கிராமத்து அப்பாவி இந்துக்களின் சொத்தின் உரிமையை பாதுகாக்க எந்த அரசியல்வாதிகளும் போராட முன்வரவில்லை. இந்து முன்னணி முன்னின்று போராடி வருகிறது.

ஓட்டு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினர் தாஜா என்பது மாறி இந்துக்களின் சொத்து, வியாபாரத்தை அபகரிப்பதற்கு துணைபோவது. மதமாற்றத்தால் இந்து குடும்பங்களை சீரழிப்பது, கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு சலுகையில் சிறுபான்மையை திணிப்பது என அக்கிரம செயல்களுக்கு அரசியல்வாதிகள் துணைப்போகின்றனர்.

இதனை இந்துக்கள் இன்னமும் உணரவில்லை என்றால் நாளை நாம் அகதிகளாக அடைக்கலம் தேடி திரியவேண்டி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வக்ஃப் வாரியத்தின் அநியாயமான செயல்பாடு குறித்து தமிழகத்தில் தான் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. திருச்சி – திருச்செந்துரை கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் மற்றும் பல நூறு ஏக்கர் இந்துக்களின் பரம்பரை சொத்துக்கள் வக்ஃப் வாரிய சொத்து என சொந்தம் கொண்டாடியது. இஸ்லாம் தோன்றுவதற்கு பல நூறு ஆண்டுகள் முன்பே இருந்த சிவன் கோவில் வக்ஃப் வாரியச் சொத்து என்று கூறியதை திமுக எம்.பி.க்கள் மழுப்பினார்கள்.

ஆனால் இதே திமுக அரசு மாவட்ட ஆட்சியர் மூலம் தற்காலிகமாக வக்ஃப் வாரிய தடையில்லா சான்றிதழ் இல்லாமல் சொத்து விற்பனையை பதிவு செய்ய வாய்மொழி உத்தரவு கொடுக்க வைத்தார்கள். உண்மையை சில நாட்களுக்கு மறைக்கலாம். எப்போதும் முடியாது.

இந்துக்கள் தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கும் வக்ஃப் வாரியத்தை ஆதரிக்கும் எந்த அரசியல்வாதிளையும் தார்மீக ரீதியாக எதிர்க்கத் துணிய வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இது இந்திய பிரிவினை காலத்தில் நடந்த மனித வேட்டையை நினைவுபடுத்துகிறது. இதன் ஆபத்தை நாடு முழுவதிலும் உள்ள இந்துக்கள் உணர வேண்டும்.

திருச்சி – திருச்செந்தூரை, திருப்பூர் – மங்கலம், சென்னை – திருவல்லிக்கேணி என பல மாவட்டங்களில் இந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் வாரியச் சொத்து எனக்கூறி வக்ப் வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏன் திருப்பரங்குன்றம் முருகன் மலையே வக்ஃப் சொத்து என்று திமுக எம்பி நவாஸ் கனி கூறினார்.

இன்று வேலூர் இறையங்காடு கிராமமே வக்ஃப் வாரியச் சொத்து என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னமும் இந்துக்கள் யாராவது வந்து நம்மையும் நமது சொத்துக்களையும் காப்பாற்றுவார்கள் என்று சும்மா இருந்தால் இந்த சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல்வாதிகள் இந்துக்களை அனாதைகளாக, அகதிகளாக ஆக்கிவிடுவார்கள்.

இலங்கையில் நடந்தது போல் இனப் படுகொலை நடந்தாலும் இந்துக்களின் சொத்துக்கள் பறிபோனாலும் இந்த அரசியல்வாதிகள் வேடிக்கை தான் பார்ப்பார்கள்.

வேலூர் – இறைவங்காடு இந்துக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி, அக்கிரமம் முடிவுக்கு கொண்டு வருவதுடன் இனி வருங்காலத்தில் இந்துக்கள் சொத்தினை அபகரிக்க வக்ஃப் வாரியம் கைகளை நீட்டாது இருக்க புதிய வக்ஃப் வாரிய திருத்தச்சட்டம் தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட இந்துக்கள் தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.

கேரளாவில் உள்ள மக்களின் விழிப்புணர்வால் அங்கு ஆளுகின்ற கம்யூனிச அரசு புதிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

எனவே இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories