
இந்தியாவில் உள்ள ஆதம்பூர் விமானத் தளத்தை பாகிஸ்தான் படைகள் தகர்த்ததாக பாகிஸ்தான் தனது நாட்டின் டிவி.,க்களில் கதை விட்டது. அதை ஃபேக்ட் செக் செய்யும் வகையில், இன்று காலையே அதே தளத்துக்குச் சென்று வீரர்களுடன் செல்ஃபி எடுத்து, அதை சமூகத் தளத்திலும் வெளியிட்டு, பாகிஸ்தானின் பொய்களை அம்பலப் படுத்தினார் பிரதமர் மோடி!
எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த வீரர்களுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார். பின்னர், வீடியோக்கள் மற்றூம் படங்களை வெளியிட்டு, இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டார்.
குறிப்பாக, இந்தத் தளத்தையும், இதில் இருந்த எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனத்தையும் பாகிஸ்தான் விமானப் படை தகர்த்ததாக அந்நாடு ஊடகங்களில் கதை அளந்தது. அதை நம்பி இந்தியாவிலும் சிலர் அது குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். இதற்கு பதிலடியாக இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பு பிஐபி ஃபேக்ட் செக் செய்து உண்மைச் செய்தியை வெளியிட்டு வந்தது. ஆனால் அது போதாது என்று எண்ணிய பிரதமர் மோடி, நேற்று இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சிகளில் உரையாற்றிய கையோடு இன்று காலை, தொடர்புடைய ஆதம்பூர் விமானப் படைத் தளத்துக்கு நேரில் சென்று, அங்கிருந்த வீரர்களுடன் சிரித்துப் பேசியபடி, அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களுடனான படங்களையும் எடுத்து உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது இந்த படங்களும் வீடியோவும் சமூகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர் சமூகத் தளத்தில் குறிப்பிட்டிருப்பது…
இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.





