உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் கட்டப்பட்டது.இக் கோயில் ஜூலை 13ல் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் நவக்கிரக சன்னதி இருந்தது.இங்கு உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று அண்மையில் பார்க்கப்பட்ட தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.இக் கோவில் பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி வேத பாராயண முறைப்படி நடைபெறுகிறது.
இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.






