
ஆயுத பூஜை, அடுத்து வரும் தீபாவளிக்கு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு ரயிலில் போக முன்பதிவு செய்து செல்லலாம்.
அக்டோபர் 1 மற்றும் 2, 2025 (புதன் & வியாழன்) அன்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறைக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று முதல் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திலும், முன்பதிவு மையங்களிலும், ‘டிக்கெட்’ முன்பதிவு செய்யலாம்.
பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது. அதன்படி, கீழ்காணும் தேதிகளில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகும். ..
ஆகஸ்ட் 1 – பயண தேதி: செப்டம்பர் 30, 2025 (செவ்வாய்)
ஆகஸ்ட் 2 – பயண தேதி: அக்டோபர் 1, 2025 (புதன்) – ஆயுத பூஜை
ஆகஸ்ட் 3 – பயண தேதி: அக்டோபர் 2, 2025 (வியாழன்) – விஜயதசமி
ஆகஸ்ட் 4 – பயண தேதி: அக்டோபர் 3, 2025 (வெள்ளி)
ஆகஸ்ட் 5 – பயண தேதி: அக்டோபர் 4, 2025 (சனி)
ஆகஸ்ட் 6 – பயண தேதி: அக்டோபர் 5, 2025 (ஞாயிறு)
ஆகஸ்ட் 7 – பயண தேதி: அக்டோபர் 6, 2025 (திங்கள்)
வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்கள் வித்தியாசம் இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
முன்பதிவு காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்குமான டிக்கெட்களுக்கும் துவங்கும்.
இதுபோல் அடுத்து வரும் ஐப்பசி தீபாவளிக்கு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் போக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும்.




