
விஜய் மாநாட்டிற்கு வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் காளீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல்குளத்தில் விஜய் மாநாட்டிற்கு வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக கம்பி எடுத்து வந்த போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் காளீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநாடு வியாழக்கிழமை மதுரையில் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் காளீஸ்வரன் கிருஷ்ணன் கோவில் அருகே தனியார் கல்லூரியில் விஸ்காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் விஜய் ரசிகராக உள்ளார் மேலும் இனாம் கரிசல்குளம் பகுதியில் பிரதான சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த கம்பியை எடுத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இறந்த கல்லூரி மாணவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





