
சிறந்த கட்டிடகலை உயர்ந்த ராஜகோபுரம் எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் தென்றல் காற்று,பழமையும் புராண வரலாற்று பெருமை நிறைந்த சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் ஐப்பசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் இன்று வியாழக்கிழமை கோலாகோலமாக நடந்தது.திரளான பக்தர்கள் திருத்தேர் வடம்பிடித்து தேர்இழுத்து பல்வேறு நேர்ச்சை கள் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள பழமையும் புராண வரலாறு பெருமை நிறைந்த சிவாலயங்களில் ஒன்றாக திகழும் தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஐப்பசி திருவிழா தேரோட்டம் நடைபெறும்.
இந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி வேதபாராயணமுறைப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வீதி உலா நடைபெற்று வந்தது.
திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று சிறப்பு நிகழ்ச்சியாக உலகம்மன் திருத்தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வரும் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் காலை 9.35 இழுக்க தேரோட்டம் துவங்கி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலை வந்து சேர்ந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி- அம்பாள் திருக்கல்யாணம் 15ஆம் தேதி சனிக்கிழமை மாலை துவங்கி நடைபெற உள்ளது.





