2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது,. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வரும் தேர்தல்களை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அர்சு கடனில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டால் அரசுக்கு கூடுதல் சுமை இருக்கும் என்பதால் வரிவிதிப்பும் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த பட்ஜெட் மார்ச் 21-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம், குரங்கணி தீ விபத்து, உஷா மற்றும் அஸ்வினி மரணம், சட்டம்- ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது