அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற புதிய மசோதா கொண்டு வரவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய ராணுவத்தில் தற்போது 7,000 அதிகாரிகள் மற்றும் 20,000 வீரர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு ஒரே தீர்வு, கெசட் அதிகாரிகள் போன்ற மேல் நிலை அரசு பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் கண்டிப்பாக ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றவேண்டும் என்ற முறை கொண்டு வரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஏற்கனவே இதுபோன்ற சட்டம் பல நாடுகளில் அமலில் இருப்பதால் இந்தியாவிலும் இதுகுறித்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டாய ராணுவ சேவை மூலம் மட்டுமே ராணுவத்தில் உள்ள காலியிடங்களை தன்னிறைவு பெற முடியும் என்றும் மத்திய பயிற்சி அமைப்புகள் மூலம், இதனை நடைமுறை படுத்தலாம் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு யோசனை கூறியுள்ளது.