dinakaran2 - 2026

சமீபத்தில் டெல்லி ஐகோர்ட் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நிலையில் இன்று அவர் தனது அணியின் பெயரை அறிவித்துள்ளார்.

மதுரை மேலூரில் தற்போது நடைபெற்று வரும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தனது அணிக்கு ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்னும் சில நிமிடங்களில் இந்த அமைப்பின் கொடியையும் அவர் ஏற்றவுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் உள்பட இனிவரும் தேர்தல்களில் தினகரனின் ஆதரவாளர்கள் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending