நீங்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். கும்பம் போல் பூரணமாக ஜொலிப்பவர்கள். விதி வழி வாழ்க்கை என்பதை ஏற்க மறுப்பவர்கள். விதி என்னும் சதி வலைக்குள் சிக்க நினைக்காதவர்கள். புதிய விதிகளை உருவாக்க முனைபவர்கள். காலத்தை வெல்ல நினைப்பவர்கள். காவியமாக நிலைப்பவர்கள். நீங்கள் சிந்தனாவாதி. அரிய பெரிய செயல்களை செய்வதற்காக சிந்திப்பவர்கள். சிறிய அளவில் உங்களுக்கு யோசிக்கவே தெரியாது. எதைப்பற்றி யோசித்தாலும் அது பிரம்மாண்டமாக இருக்கும். உங்களுக்காக மட்டுமல்ல, மற்றவர்களுக்காக செய்தாலும் மாஸ்டர் பிளான்கள்தான். சரி… விளம்பி வருஷ தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு தரும் நற்பலன்கள் என்ன? கெடுபிடிகள் என்ன என்பதைப் பார்க்கும் முன் தற்போதைய நிலவரத்தைப் பார்ப்போம்.



