தேவகுருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். தன்னலம் இல்லாதவர்கள், தலைவனாகும் தகுதி உள்ளவர்கள். உங்களுக்கு உழைப்பது பிடிக்கும், ஊருக்கு உழைப்பது இன்னும் பிடிக்கும். மென்மையாளவர்கள், அதை விட முக்கியமாக உண்மையானவர்கள். நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்கள். கௌரவம் பார்ப்பவர்கள். அந்தஸ்து பார்க்காமல் பழகுவதில்லை. உங்களை விட உயர்ந்தவர்களை தேடிப்பிடித்து பழகுவது உங்களுக்கு பிடித்த விஷயம். உங்களைப் பொறுத்தவரை எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாதவர்கள். உங்களுக்கு சுயநலம் இருந்தாலும் பொதுநலம் அதிகம்.



