
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி 41வது நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற உள்ள நிலையில் சுவாமி ஐயப்பனுக்கு அன்று அணிவிக்கப்படும் தங்க அங்கி இன்று டிசம்பர் 23 ஆம் தேதி ஆரண்முழா பார்த்த சாரதி கோயிலில் இருந்து சபரிமலை போல் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.
27 ஆம் தேதி மண்டல பூஜைக்காக 26 ஆம் தேதி சபரிமலையை அடையும். அன்று மாலை தீபாராதனையின் போது சுவாமிக்கு தங்கி அணிவிக்கப்பட்டு பூஜை வழிபாடு நடைபெறும் 27ஆம் தேதி மண்டல பூஜை இன் போதும் சுவாமிக்கு இந்த தங்கி அணிவித்து பூஜை வழிபாடு நடைபெறும்
மண்டல பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பனுக்கு வழங்கப்பட வேண்டிய தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் டிசம்பர் 23 ஆம் தேதி இன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. டிசம்பர் 26 ஆம் தேதி மாலை தீபாராதனைக்கு முன் சபரிமலை சன்னிதானத்தை அடையும். டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முலா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.திரளானழர்கள் தரிசனம் செய்தனர்.மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அர்ப்பணிப்பதற்காக தங்க அங்கியை 421 பவுன் எடையில் திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கினார்.

தங்க அங்கி
டிசம்பர் 23: ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் தொடங்குகியது
பல்வேறு ஊர்களில் ரத ஊர்வலம் சென்று வரும் டிச 26 மதியம் 1.30 மணிக்கு பம்பா வந்தடையும் .பிற்பகல் 3 மணிக்கு பம்பாவிலிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு சரம்குத்தியை அடையும் .இங்கிருந்து, சடங்குகளுடன் வரவேற்கப்பட்டு, சன்னிதானத்திற்கு தங்க அங்கி அழைத்துச் செல்லப்படும் 18வது படியில் ஏறி சோபனத்தை அடையும் போது, தந்திரியும் மேல்சாந்தியும் வரவேற்று ஐயப்பன் சிலைக்கு தங்க அங்கி வைப்பார்கள். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
27 ஆம் தேதி நண்பகல் 1 மணிக்கு மண்டல பூஜையில் தங்க அங்கி சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து மண்டல அபிஷேக நிறைவு பூஜை வழிபாடு விமர்சையாக நடைபெறும் அன்று மாலை சுவாமிஜி தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடத்தி பின்னர் இந்த தங்காங்கி ஆரம்பம் பார்த்தசாரதி கோவிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படும்.




