சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து பூஜை வழிபாடுகள்..

1001148555 - 2026
1001148414 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளதையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வெள்ளிக்கிழமை மாலை சன்னிதானம் வந்தடைந்ததும் சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து பூஜைகள் தீபாராதனை வழிபாடு நடைபெற்றன.

1001148615 - 2026

இந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை கடந்த நவ.16-இல் திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்து வருகின்றனா். மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிச 27 சனிக்கிழமை காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஆண்டு தோரும் எடுத்து வரப்படுகிறது. கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய இந்த ஊா்வலம், ஐயப்பன் கோயிலை வெள்ளிக்கிழமை மாலையில் வந்தடைந்தது.

திருவாங்கூர் தேவசம் ரோடு அதிகாரிகள் சபரிமலை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் தந்திரி ஆகியோர் தங்கி வரவேற்றனர் 18 படி வழியாக கொண்டு செல்லப்பட்ட தங்கு அங்கி பெட்டகம் சுவாமி ஐயப்பன் சந்நிதிக்கு எடுத்து செல்லப்பட்டு மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மூலஸ்தானத்திற்குள் தங்கி அங்கியை எடுத்துச் சென்று சுவாமி ஐயப்பனுக்கு அணிவித்து அலங்கரித்து சிறப்பு தீபாராதனை வழிபாடு இன்று மாலை 6:30க்கு துவங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தங்கி அணிந்த சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர் .

1001148485 - 2026

இந்த தங்காங்கி 4 21 பவுன் எடை கொண்டது இந்த தங்கி அங்கி திருவாங்கூர் மகாராஜா சபரிமலை ஐயப்பனுக்காக சபரிமலை மூலஸ்தானத்தில் உள்ளது போல் செய்து வழங்கியது ஆகும்

நாளை சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மண்டல பூஜை. சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த 41 நாட்கள் மண்டல காலத்தின் போது மட்டுமே நீண்ட நாட்கள் திறந்திருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல காலத்தில் மாலை அணிந்து, கடுமையாக விரதம் இருந்து சபரிமலை வந்து, சாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு புனிதத் தலமாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது மண்டல பூஜை ஆகும்.
மலையாள மாதமான ‘விருச்சிகம்’ (கார்த்திகை முதல் தேதி) முதல் தேதியில் தொடங்கி, 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் வழிபாட்டு காலமே மண்டல காலம் எனப்படுகிறது. இந்த 41 நாட்களின் நிறைவு நாளில் ஐயப்பனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையே ‘மண்டல பூஜை’ ஆகும். இது பொதுவாக டிசம்பர் மாதம் 26 அல்லது 27-ம் தேதிகளில் நடைபெறும். இந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதியான நாளை சபரிமலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நடைபெற உள்ளது.

மண்டல பூஜையின் உண்மையான பலனைப் பெற ஒரு பக்தர் 41 நாட்கள் கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தைத் தொடங்கும் பக்தர்கள் துளசி அல்லது உருத்திராட்ச மாலையை அணிந்து ‘சுவாமி’யாக மாறுகிறார்கள். மது, புகை, அசைவ உணவுகளைத் தவிர்த்தல், பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தல் மற்றும் தரையில் உறங்குதல் போன்றவை கட்டாயமாகும். கறுப்பு, நீலம் அல்லது காவி நிற ஆடைகளை அணிவதன் மூலம், உலகியல் சுகங்களைத் துறந்து அனைவரும் சமம் என்ற மனநிலையை பக்தர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் தங்களின் பாவ-புண்ணியங்களை மூட்டையாகக் கட்டி, நெய் தேங்காயுடன் தலைப்பொதியாகச் சுமந்து வருவது ‘இருமுடிக்கட்டு’ எனப்படும். இது “நான்” என்ற அகந்தையை விட்டு இறைவனிடம் சரணடைவதைக் குறிக்கிறது.

மண்டல பூஜைக்கு சில நாட்களுக்கு முன்பு, திருவிதாங்கூர் மன்னரால் வழங்கப்பட்ட 421 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஆரண்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும். மண்டல பூஜை அன்று இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும்.பக்தர்கள் கொண்டு வரும் பசு நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நெய் என்பது ஆத்மாவையும், தேங்காய் என்பது உடலையும் குறிப்பதாக ஐதீகம். மண்டல பூஜை அன்று வேத மந்திரங்கள் முழங்க சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படும். பிறகு பதினெட்டு படிகளுக்கும் பூஜைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 23ம் தேதி துவங்கியது. சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும் தங்க அங்கி, இன்று மாலை நடைபெறும் சிறப்பு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.

நாளை மண்டல பூஜை யின் போதும் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை வழிபாடு நடைபெறும்.இரவு படிபூஜை நிறைவடைந்ததும் இரவு 10.30 மணியளவில் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை அடைக்கப்படும். அதோடு இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நிறைவு பெறும். மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதியன்று மாலை 5 மணியளவில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

மகர சங்கராந்தி தினமான ஜனவரி 15ம் தேதியன்று பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அறிவிக்கப்பட்டு, பூஜைகளை நடைபெற்ற பிறகு மாலை 6 மணிக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதற்கு பிறகு ஜனவரி 19ம் தேதி இரவு வரை சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 19ம் தேதியன்று மாலையுடன் பக்தர்கள் மலையேறுவது நிறுத்தப்படும். ஜனவரி 20ம் தேதியன்று காலை 7 மணியளவில் பந்தள அரண்மனை பிரதிநிதிகள் முன்னிலையில் சபரிமலை நடை அடைக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories