திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்.உயர் நீதி மன்றம் மதுரை கிளை-தீர்ப்பு…

1001171034 - 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்துாண் தான்.தீபம் ஏற்றலாம்.என உயர் நீதி மன்றம் மதுரை கிளை செவ்வாய் கிழமை தீர்ப்பு வழங்கியது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். தீபம் ஏற்றலாம் என மதுரை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு இன்று பிறப்பித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை தர்காவில் நாளை சந்தனக்கூடு உருஸ் திருவிழா நடக்கிறது. இதில் ஆடு, கோழி பலியிடக் கூடாது. விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகள் விதித்து தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி ஜன 2ல் உத்தரவிட்டார். தர்கா நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று முறையிட்டதாவது: சந்தனக்கூடு விழாவில் அதிகம் பேர் பங்கேற்பது வழக்கம்.50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது ஏற்புடையதல்ல. எங்கள் தரப்பில் போதிய விளக்கமளிக்க தனி நீதிபதி வாய்ப்பளிக்கவில்லை. 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.

நீதிபதிகள்: அவசர வழக்காக விசாரிக்க வாய்ப்பில்லை. ஆடு, கோழி பலியிடும் விவகாரம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது தர்கா தரப்பில் கோரப்படும் நிவாரணம் தொடர்பாக தீபத்துாண் வழக்கில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த அமர்வு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது. அதன் முடிவைப் பொறுத்து தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் விசாரிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இதே இரு நீதிபதிகள் அமர்வில் டிச18 ல் முடிந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் கூறியதாவது,திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு செல்லும். தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்துாண் தான். அது கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றலாம். தீபத்துாண் தர்காவிற்கு சொந்தம் எனும் வாதம் சிறுபிள்ளைத்தனமானது. தீபம் ஏற்றுவது அமைதியை சீர்குலைக்கும் என்பது அபத்தமானது. தீபம் ஏற்ற வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை நியாயமானது. பொது அமைதிக்கு பிரச்சனை ஏற்படும் என அரசு காரணம் காட்டுவது ஏற்றத்தக்கதல்ல. அரசியல் காரணங்களை காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட கூடாது எனுவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பெயரில்,சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும்; பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என்று திமுக அமைச்சர் ரகுபதி பேசியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும், ஹிந்து மத மக்களின் வழிபாட்டு உரிமை, பண்பாடு என இவை அனைத்தையும், முதல்வர் உட்பட திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும், திமுக அரசின் ஹிந்து மத விரோத மனநிலையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினர் செயல்பாடுகளை, நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்றனர். நாவடக்கம் இன்றித் திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories