February 22, 2026, 12:02 AM
26.7 C
Chennai

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

cong in ai summit and parliament - 2026

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் செயல் அறுவறுக்கத்தக்கது என அரசியல் மட்டத்தில் பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன.  ஏஐ மாநாட்டில் காங். போராட்டம் நடத்தியது தேசிய அவமானம் என்று பாஜக கூறியுள்ளது. 

தில்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர், தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. 

சர்வதேச அளவிலான செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், இந்த உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் உள்ள ஓர் அரங்குக்குள் நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தங்கள் சட்டைகளைக் கழற்றிவிட்டு இந்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக, இந்தியா – அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அங்கே கூடியிருந்த இளைய தலைமுறையினர் சிலர் அடித்து விரட்டினர். இந்த வீடியோ சமுகத் தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞர் காங்கிரசின் தேசிய செயலாளர் கிருஷ்யா ஹரி, பிஹார் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் குந்தன் யாதவ், உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அஜய் குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை உலகமே பார்த்து வியந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இதைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சி தனது குண்டர்களை அனுப்பி  ஏஐ உச்சிமாநாட்டில் கொஞ்சமும் அடிப்படை நாகரிகமின்றி, நமது நாட்டின் பெருமையை சீர்குலைக்கும் நோக்கில் மேலாடையைக் கழற்றி கையில் சுழற்றிக் கொண்டு பொறுக்கித்தனம் செய்து உலக அரங்கில் தங்கள் எதிர்க்கட்சி மானத்தை கப்பலேற்றினர்.

ஆளும் அரசினை, பிரதமரை நேரடியாக  அறிவாலும், ஆற்றலாலும் ஜனநாயக முறையிலும் வெற்றி கொள்ள முடியாத விரக்தியில், ராகுலும் அவரது இளைஞர் காங்கிரஸ் அடியாட்களும் மூளை மழுங்கி பைத்தியம் முற்றிவிட்டது போல நடந்து கொண்டது இந்திய அளவில் பொதுமக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.  சில தினங்களுக்கு முன்னர்தான், நாடாளுமன்றத்தில் பெண் எம்பி.,க்களைக் கொண்டு பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த முயன்று, காங்கிரஸ் மற்றும் ராகுலின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்த ஆத்திரத்தில், பல நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் ஒரு மாநாட்டில் இன்று இப்படியொரு ஆபாச நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது காங்கிரஸ். 

இந்திய வரலாற்றில் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய அவமான அடையாளம் நேற்றைய சம்பவம். இடம், பொருள், வெட்கம், மானம் இவற்றில் எதுவும் கடுகளவு கூட காங்கிரஸாருக்கு கிடையாது என்பதற்கு இது ஒரு சான்று. தேசப்பற்று இல்லாமல் போகும் தேசவிரோதிகளுக்குத் தான் இது போன்ற கேவலமான எண்ணங்கள் தோன்றும். நாடு முன்னேறுவதை ஒரு துளியும் சகிக்க மாட்டாத இவர்கள் எதிர்க்கட்சியின் வரிசையில் அமர்ந்து கூட இருக்கத் தகுதியற்றவர்கள் என்ற கருத்தை விதைத்திருக்கிறார்கள். 

இந்நிலையில், ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கண்டித்துள்ளார். புது தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 

தில்லியில் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் சிறப்பாக செயல்படுவதாக புகழ்ந்து பேசினர். இது பெருமைக்குரிய தருணம். பிரதமர் மோடி தலைமையில் உலக நாடுகளை இந்தியாவின் தலைமையின் கீழ் கொண்டு வர வலுவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முக்கிய நபர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். ஆனால், அதே நேரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், ஒரு அவமானகரமான செயலை செய்துள்ளனர். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து எத்தனை கண்டனங்கள் முன்வைத்தாலும் போதாது.

அவர்கள் செய்தது தவறு அல்ல, ஒரு குற்றம். காங்கிரஸ் உறுப்பினர்கள் நாட்டுக்கு எதிராக செய்த ஒரு செயல். நாட்டை பற்றிய சிறிதளவேனும் அக்கறை இருந்திருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் தங்களை சுயபரிசோதனை செய்து மன்னிப்பு கேட்கும் என்று நம்பினோம். ஆனால், மன்னிப்பு கேட்பதற்கு பதில், நியாயப்படுத்தி இது கோபத்தின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறுகின்றனர். உலக நாடுகள் முன், நம் நாட்டை அவமானப்படுத்த கோபத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினால் அதைவிட வெட்கக்கேடானது என்று எதுவும் இருக்க முடியாது. – என்று கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.  

ஏஐ உச்சிமாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? என்று, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி தன்னை நாட்டின் தலைகுனிவு என மீண்டும் நிரூபித்துவிட்டது. ஏஐ உச்சிமாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்த ஒரு நிகழ்வில் நாட்டை அவமானப்படுத்தும் முயற்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏஐ உச்சிமாநாடு 250 பில்லியன் டாலருக்கு மேலான முதலீடுகளையும், 20 பில்லியன் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகளையும் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டால் இவ்வளவு தொழில்நுட்ப முதலீடுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை.

பிரதமர் மோடி தலைமையின் கீழ், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கை இதுதான். இந்தியாவின் ஏஐ எதிர்காலத்தில் உலகம் நம்பிக்கை வைத்த போது, காங்கிரஸ் கட்சி நாட்டு நலனுக்கு மேலாக நாடகத்தை தேர்ந்தெடுத்தது – என்று கூறியுள்ளார். 

சர்வதேச அளவில் நடந்த ஏ ஐ மாநாட்டில் காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்கள் நாகரீகமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் போராட்டம் நடத்தியது வெட்கக்கேடானது; காங்கிரஸ் இளைஞர் அணி உறுப்பினர்களால் இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் நடந்த முக்கிய மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது; இந்தியாவின் வளர்ச்சியையும் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியையும் சீர்குலைக்க முயலும் காங்கிரசின் இதுபோன்ற அநாகரிகமான செயல்பாடுகள் நாட்டு மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்று அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் நடந்த ஏ ஐ உச்சி மாநாட்டை தங்களின் அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் இளைஞர் அணி பயன்படுத்தியது முற்றிலும் வருந்தத்தக்கது. அரசியல் கருத்து வேறுபாடுகளைக் காட்டுவதற்கு சர்வதேச உச்சி மாநாட்டை பயன்படுத்த முடியாது என்று பி ஆர் எஸ் செயல் தலைவர் கே டி ராமராவ் கூறியுள்ளார். 

தில்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் இளைஞர் அணி உறுப்பினர்களின் செயலால் அனைவரும் வெட்கப்பட வேண்டும். அரசியல் வித்தியாசங்களைக் கடந்து உலகத்துக்கு முன்னால் நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Entertainment News

Popular Categories