திருவண்ணமலைக்கு வருகைதந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தூய்மை இந்திய இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி, மற்றும் அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மை இந்திய இயக்கத்தின் கீழ் சொந்த முயற்சியில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுதிய மாணவ,மாணவிகளுக்கு தனது கையொப்பமிட்ட அப்துல்கலாம் புத்தகத்தை வழங்கி பாராட்டினார்.மேலும் அண்ணாமலையார் கோவில் முன்பு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சாலையில் உள்ள குப்பைகள் அகற்றி தூய்மை பணியில் ஈடுப்பட்டார். நகராட்சி சுகாதார பணியாளர்கள் 365 நபர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். பிற்பகல் 2.15 மணிக்கு செங்கம் சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்திவரும் திட்டங்களை பற்றி ஆய்வு மேற்க்கொண்டு பின்பு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Popular Categories



